இதயத்தில் எண்ணங்கள் அலைமோதினும்
இதழ்களில் மௌனங்கள் குடியேறின
எதுஞ்சொல்ல முடியாத சூழ்நிலைகளும்
அவள்விழியும் என்பேச்சைக் கைதாக்கின
நெஞ்சத்தின் வார்த்தைகளை கண்பேசின
நீர்த்திரையின் பின்னிருந்து அவைபேசின
மஞ்சள் நிலவிரவின் கனவுகளையே
மறுபடியும் அசைபோட்டு அவைபேசின
நீர்சிந்தும் விழிகண்டு வருத்தமில்லை
நீசிரிக்க அவையழுதால் ஒன்றுமில்லை
பார்வையின் மொழியேன் புரியவில்லை?
பாரிலெங்கு மதற்குவரி வடிவமில்லை
வீயார்
மௌனம்
Aucun commentaire:
Enregistrer un commentaire