-
-
பதிபல ஆயது பண்டு இவ்வுலகம்
விதிபல செய்து ஒன்னும் மெய்ம்மை உணரார்
துதிபல தோத்திரம் சொல்ல வல்லாரும்
மதியிலர் நெஞ்சினுள் வாடுகின்றாரே!
-
கருத்து:
பழங்காலம் முதல் இவ்வுலகத்தில், ஒரே பரம்
பொருள் பலவாறாகச் சொல்லப்படுகிறது.
-
அந்த இறைவனின் அருளை அடைவதற்காக,
விதிமுறைப்படி சடங்குகளையும், விரதங்களையும்
கடைபிடிப்பவர்கள், இறை உண்மையை உணர
மாட்டாதவர்களாக இருக்கின்றனர்.
-
ஸ்தோத்திரங்களையும், துதிப்பாடல்களையும்
சொல்லும் திறமை பெற்றவர்கள் கூட, இறை
உண்மையை உணராது, கருத்தழிந்து மனவாட்டம்
கொண்டவர்களாக இருக்கின்றனர்.
-
- பரம்பொருள் ஒன்றே, பல தெய்வங்களாக
இருக்கிறது; அதை உணர வேண்டும் என்பது
கருத்து.
-
----------------------------
திருமந்திரம்!
Aucun commentaire:
Enregistrer un commentaire