dimanche 31 mai 2015

மரிக்கொழுந்து


-
ஆத்தோரம் போறவளே …
அத்த மக ரத்தினமே !…
மச்சானை பாரேண்டி…
மாந்தோப்பில் நானிருக்கேன் …
-

சேலை கட்டி நீ வந்தால் …
சிலிர்க்குதடி என் மனசு..!..
சேதி ஒன்னு வச்சிருக்கேன் …
சீக்கிரமே வந்திடடி…
-

மல்லி பூ கமகமக்க …
மரிக்கொழுந்தே நீ வரும் போது…
மத்தியான வேளையிலும் ….
மச்சான் மனம் குளிருதடி…
-

கண்ணுறங்கும் நேரத்திலும் …
கண்ணசர முடியலடி …
உண்ணும் வேளையிலும் …
உணவுண்ண தோணலியே …
-

மழைக்கு கூட ஒதுங்கலையே…
பள்ளிகூட வாசப்பக்கம். ..
கண்மணியே நீ இப்ப…
கவி பாட வச்சுட்டியே…
- பயமேதும் வேணாம்டி …
பண்பாட்டில் வளர்ந்தவன்டி…
உன்கூட வாழ்வேன்டி…
என் உசிரு உள்ளவரை…
-

***********************************

*குணசேகரன்…



மரிக்கொழுந்து

Aucun commentaire:

Enregistrer un commentaire