vendredi 29 mai 2015

நன்னாரி தேன் சர்பத்


-

தேவையான பொருட்கள்
-

நன்னாரி வேர் – 200 கிராம்
தண்ணீர் – கால் லிட்டர்
தேன் – தேவைக்கேற்ப
எலுமிச்சை-1
-

செய்முறை
-

* முதல் நாள் இரவே ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி
நன்னாரி வேர்களைச் சிறு சிறு துண்டுகளாக்கி
அதில் ஊற விட வேண்டும்.
-

* மறுநாள் காலை வேருடன் ஊறிய நீரை அடுப்பில்
வைத்து பாதியாக வற்றும் வரை காய்ச்சி வடிகட்டி
நீரை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதனுடன் தேன் கலந்து குளிர்ச்சியாக சாப்பிட்டால்
உடலுக்கு நலம். சிறிது எலுமிச்சையும் இதோடு
சேர்த்து கொள்ளலாம்.
-
இதனால் உடல் சூடு குறையும்.
கண் எரிச்சல் வராது. நாக்கு வறட்சி உண்டாகாது.

கோடைக்கு சுகம் தரும் சர்பத் இது.
சர்க்கரை நோயாளிகளுக்கும் ஏற்றது.

———————————-
நன்றி!
மாலை மலர்.



நன்னாரி தேன் சர்பத்

Aucun commentaire:

Enregistrer un commentaire