--
‘காலங்களில் நான் வசந்தம்’ என்று கண்ணன்
பகவத் கீதையில் கூறி உள்ளார். வசந்த காலம்
என்பது இளவேனிற் காலம்.
-
சித்திரை, வைகாசி மாதங்களே இக்காலம்.
பூக்கள் அதிகம் பூத்துக்குலுங்கும் காற்று அதிகம் உண்டு.
மலர்களும் அதிகம் மலர்ந்து மணம் பரப்பும். வைகாசி
மாதத்தில் தான் கோவில்கள் அனைத்தும் வசந்த உற்சவம்
நடைபெறும்.
-
புத்தர் அவதரித்தது வைகாசி விசாகத்தில் தான்.
சித்தார்தர் என்ற பெயரில் இளவரசராக இருந்த அவர்
புத்தராக மாறியதும், பவுத்த மதத்தை தோற்றுவித்ததும்
இதே விசாக பவுர்ணமி அன்றுதான்.
இதைத்தான் ‘புத்த பூர்ணிமா’ என்று அழைக்கிறோம்.
=
தினத்தந்தி
புத்த பூர்ணிமா
Aucun commentaire:
Enregistrer un commentaire