dimanche 31 mai 2015

காதலெனும் நூதனக் கொள்ளை

காதலெனும் நூதனக் கொள்ளை

ஈரம்காய்ந்த விழிகள்மூடி கனவுஒன்று காணவா
காயமான இளமையினைக் கவிதையாகப் பாடவா

மறவேன்நான் என்றமனம் மறந்ததைநான் கூறவா
இறப்பொன்றே பிரிக்குமென் றேமாந்ததைக் கூறவா

அழியாதது காதலென்று எண்ணியதென் அறிவீனம்
பழியோரிடம் பாவமோரிடம் என்நிலையோ பரிதாபம்

காதலென்னும் தீயில்பட்டு இனியும்நான் வாடுவனோ
நூதனக் கொள்ளைசெய்யும் நங்கையரை நாடுவனோ

வீயார்



காதலெனும் நூதனக் கொள்ளை

Aucun commentaire:

Enregistrer un commentaire