உலகினில் நீயெதை மறந்தாலும்
உனைப் பெற்றவளை மறவாதிரு
அளவிடற் கரியது அவள்கடனே
அந்தக் கடனை நீமறவாதிரு
(உலகினில் நீயெதை மறந்தாலும்)
கருவினில் நம்மை சுமந்தாளே
கண்ணுறக்கம் தனை மறந்தாளே
பெருந்தியாகம் அதனை நினையாமல்
இந்தப் பிறவியெடுத்தது வீணாகும்
(உலகினில் நீயெதை மறந்தாலும்)
எல்லையிலாத அன்பு தந்தாள்
நல்லது தீயதின் அறிவுதந்தாள்
கல்கனி யாகும் கருணையினைச்
சொல்லில் வடித்திட முடியாதடா
(உலகினில் நீயெதை மறந்தாலும்)
தன்னை வருத்தி நமைக்காத்தாள்
நம்முகம் பார்த்து நகைப்பூத்தாள்
அன்னையின் அன்பில் திளைத்திடவே
ஆயர் பாடியில் அவனும்வந்தான்
(உலகினில் நீயெதை மறந்தாலும்)
வீயார்
தாய் - வஞ்சி விருத்தம்
Aucun commentaire:
Enregistrer un commentaire