1) அழகான பூ! அருகில் ஆபத்து! அது என்ன?

2) கால நேரம் காட்ட அண்ணன், தம்பி ஓட்டம்
– அது என்ன?

3) தாளத்தோடு, ராகத்தோடு, முடிவில்லாப் பயணம்
– அது என்ன?

4) ஓங்கி வளர்ந்தவள்! வாழ்வுக்கும் தேவை,
சாவுக்கும் தேவை – அது என்ன?

5) வெளிச்சத்துடன் வீதி வழி போவான்! அவன் யார்?

6) கொட்டிக் கிடப்பவன், கோபுரமாவான்! அவன் யார்?

7) வளைவு நெளிவு உள்ளவள் இருக்கிறாள் கடையிலே!
அவள் யார்?

8) உடைத்த பாத்திரத்தை ஒட்ட வைக்க முடியாது!
அது என்ன?

9) வலை பின்னுபவன், அந்த வலையில் சிக்க
மாண்டான்! அவன் யார்?

10)கொண்டையில் பூ வைத்தவன்! கூவித் திரிகிறான்
-அவன் யார்?



————————————–
விடை தெரிந்தவர் சொல்லுங்கள்
You Might Find These Useful: