-
ஜே கே எனும் நண்பனின் வாழ்க்கை’
படத்தில் நடித்த சர்வானந்த் – நித்யா மேனன்
ஜோடி மீண்டும் ‘நீ நான் நாம்’ என்ற படத்தில்
இணைந்து நடிக்கின்றனர்.
-
முன்னாள் தென்னிந்திய திரைப்பட வர்த்தக
மன்றத்தலைவர் சி.கல்யாண் தமிழ், தெலுங்கு என
இரண்டு மொழிகளில் தயாரிக்கும் படத்தில் 18 வயது
இளம்பெண்ணின் அம்மாவாக நடித்திருக்கிறார்
நித்யா மேனன்.
-
‘ஓ காதல் கண்மணி’ படத்தில் திருமணம் செய்து
கொள்ளாமலே ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும்
பெண்ணாக நடித்த நித்யா மேனன் இந்தப் படத்தில்
அதற்கு நேர்மாறான வேடத்தில் நடித்திருக்கிறார்.
அதாவது, திருமண உறவின் புனிதத்தை உணர்ந்து,
திருமணத்தை வலியுறுத்துகிற பெண்ணாக நடிக்கிறார்
நித்யா மேனன்.
-
திருமணம் வேண்டாம் என்று
சொல்கிற தன்னுடைய 18 வயது மகளுக்குத் திருமணம்
என்பது எவ்வளவு அவசியமானது என்பதைத் தன்
வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் வழியே
நித்யா மேனன் எடுத்துச் சொல்வதுபோல் திரைக்கதை
அமைக்கப்பட்டிருக்கிறது.
–
தமிழ் முரசு, சிங்கப்பூர்
அம்மா வேடத்தில் நித்யா மேனன்-
Aucun commentaire:
Enregistrer un commentaire