நிலவும், தாரகைகளும் அற்ற வான்,
நீள்குழல் சூடா மலர் நிறை சோலை,
நிலமென்று சொல்ல முடியா உவர்மண்,
நீண்டு விரிந்த படி இருக்கும் பாலை,
எங்கே?
நீள்குழல் சூடா மலர் நிறை சோலை,
நிலமென்று சொல்ல முடியா உவர்மண்,
நீண்டு விரிந்த படி இருக்கும் பாலை,
சிரிப்பைத் தொலைத்த மாந்தர்,
செழுமை மறைந்த வயல்கள்,
இழப்பே அடைந்த வேந்தர்,
இனிமை அற்ற குயில்கள்,
இவையெல்லாம் காணலாம் இன்றும்!
எனை மட்டும் காணாதெங்கும்
அலையாதீர்! மிஞ்சாது ஒன்றும்!
அவள் போனதும், போனதென் உயிரும்!
எங்கே?
Aucun commentaire:
Enregistrer un commentaire