உலகம் உடையின் உயர்வைக் கண்டு மதிக்கிறது.உள்ளத்தின் உயர்வை உன்னுவதில்லை .
சிவ பெருமான் தோலாடை உடுப்பவர்.
திருமால் பட்டாடை உடுப்பவர்.
பாற்கடல் என்ன செய்தது.?அது கூட ஆடம்பரத்தை விரும்பியது .தோலாடை உடுக்கும் சிவனாருக்கு ஆலால விடத்தை அளித்தது.பட்டாடை உடுக்கும் பரந்தாமனுக்கு தன மகள் இலக்குமி தேவியை ஈந்தது.இந்த கருத்தை விளக்கும் -பாடல்:
"மேலாடை இன்றிச் சபை புகுந்தால் இந்த மேதினியோர்
நூலாயிரம் படித்தாலும் எண்ணார் ;நுவல் பாற்கடலோ
மாலா னவரணி பொன்னாடைகண்டு மகளைத் தந்தே
ஆலாலம் ஈந்தது தோலாடை சுற்றும் அரன் தனக்கே."
ஒரு சமயம் அவ்வையார் மதுரையில் பாண்டிய மன்ன னுடைய திருமணத்துக்குச் சென்றார்.எளிமையான உடை உடுத்தியிருந்த ஔவையாரை அரண்மனைக் காவலர்கள் தள்ளி விட்டார்கள்.
பாவம், மதுரையை விட்டே புறப்பட்டு விட்டார்.எதிரே சிலர் " தமிழ்த் தாயே,பாண்டிய வேந்தனின் திருமணம் சிறப்பாக நடக்கிறதாமே.தாங்கள் நல்ல விருந்துண்டு மகிழ்ந்தீர்களா?" என வினவினர்.
அப்போது ஔவை "உண்டேன் உண்டேன் உண்டேன் 'என்று நீளமாகக் கூறினார்.
" என்ன, விருந்து மிக பலமோ?" என்றனர்.
உடனே ஒளவை "தெளிந்த வல்ல பாண்டியனின் மகத்தான திருமணத்திலே நான் உண்ட உயர்வை உரைக்க வேண்டுமா?" என்று ஒரு அருமையான பாடலைக் கூறினார்.
"வண்டமிழைத் தேர்ந்த வழுதி கலியாணத்
துண்ட பெருக்கம் உரைக்கக் கேள் -அண்டி
நெருக்குண்டேன் தள்ளுண்டேன் நீள் பசியினாலே
சுருக்குண்டேன் சோறு ண்டிலேன்"
உண்டிலாத சுவையே இவ்வாறெனில்,வயிறு நிறைய
உண்டிருந்தால் கவிச் சுவை எப்படி இருக்கும்?
Jayasala 42
aal paathi, aadai paathi
Aucun commentaire:
Enregistrer un commentaire