lundi 26 janvier 2015

Vaasthu Sastram

வாஸ்து பண்டிதர்கள் தங்களை 'பஞ்ச பூத பிரதி நிதிகள்' என்றும், தாங்கள் சொல்லும் 'பஞ்ச பூத பரிகாரங்கள்' ஆரோக்யக் கேடு, விபத்துக்கள், மரணம் போன்ற கெட்ட நிகழ்ச்சிகளைத் தடுக்க வல்லது என்றும் சொல்லிக் கொள்கிறார்கள்.


நம்முடைய வீடு, நாம் வாழும் வாழ்க்கை முறை எல்லாமே ஐந்தோடு ( Five elements)இணைந்து இசைந்து சம நிலையில் செயல் பட வேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.


கிராமங்களில் தேரோடும் வீதிகளில் நான்கு தெருக்களிலும் இரு வரிசைகளிலும் வீடுகள் இருக்கும்.அதில் கீழ வீதியில் வாழும் ஒரு பகுதி மக்களுக்கு மேற்புற வாசல் தானே இருக்க இயலும்?அந்த காலத்திலுள்ள street house concept ல் வாசல் புறமும், கொல்லைப் புற வாயில் தான் உண்டே தவிர ,பக்க வாட்டு ஜன்னல் என்பதே கிடையாது.


அப்போதெல்லாம் யாருமே பேசாத 'வாஸ்து' இன்றைய உலகில் எப்படி பிரபல மானது?


அப்போ தேல்லாம், வாசல் வாசற்படி யும், கொல்லை வாசற்படியும் கிராஸ் ventilation காக ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோள் மட்டுமே இருந்தது.


பஞ்சாங்கத்தில் 'வாஸ்து புருஷன்' நித்திரை விடுதல் என்று எட்டு நாட்கள் குறிப்பிட்டு இருப்பர்.அந்த எட்டு நாட்கள் தான் அவர் விழித்திருப்பதாகவும் மீதி நாட்களில் உறக்கத்தில் ஆழ்ந்துள்ளதாகவும் செய்தி.அந்த 8 நாட்களைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்வோரும், அந்த 8 நாட்களில் ஒன்றில் தான் வீடு கட்ட மனை முஹுர்த்தம் செய்ய வேண்டும் சொல்வோரும் உண்டு.


Ground has become a scarcity these days .நல்ல இடத்தில் கால் கிரௌண்ட் கிடைத்தால் கூட வரவேற்கிறார்கள்.


இருப்பதே உழக்கு, அதில் கிழக்கு மேற்கு பார்ப்பது எப்படி?


சின்ன இடங்களில் நீர் நிலைகள், sump ,கழிவு நீர்க் குழாய்கள் ,அக்னி மூலை , ஆகாச மூலை என்று பார்ப்பது கஷ்டம். அதுவும் அடுக்கு மாடி வீடுகளில் ,ஒவ்வொரு அங்குலமும் சரியான முறையில் உபயோக ப் படுத்த வேண்டியது மிக மிக அவசியம்.அக்னி மூலையில் பெயருக்கு ஒரு electrical stove வைக்கும் பாயிண்ட் வைத்து விட்டு, வாசற்படி என்று வாஸ்து குறிப்பிட்டுள்ள இடங்களில் ஜன்னலோ, வென்டிலேடரோ வைத்து சமாளிப்பது தான் உத்தமம்.நினைத்தது கிடைக்காவிடில், கிடைத்ததை ஏற்பதுதானே முறை?


மேலும், வாஸ்துபடி வீடு கட்டி வாழ்ந்தவர்கள் வீட்டில் மரணம் சம்பவிக்காதா அல்லது கெ ட்ட சம்பவங்களும் குடும்ப சிக்கல்களும் ஏற்படாதா?அப்படியானால் கர்ம பலனை மாற்றக் கூடிய சக்தி வாஸ்துவுக்கு உண்டா என்ற ஐயம் எழுகிறது.


நிம்மதி, மகிழ்ச்சி எல்லாமே நம் மனதில் எழும் எண்ணங்கள் தானே தவிர, அவை எதையும் சார்ந்து இல்லை என்று நாம் படித்தது தானே?


எதோ பால்கனியில் சின்ன துளசி செடி வை என்று சொன்னால் செய்யலாம். லக்ஷக் கணக்கில் செலவு செய்து ,கட்டிடத்தையே மாற்றி அமைத்து , வாஸ்து அல்லது இயற்கை சக்தி அல்லது energy pockets ஐ சமநிலைப் படுத்தினால் மட்டும் நிம்மதியான சூழ்நிலை உருவாகும் என்று யாரேனும் உத்தரவாதம் தர இயலுமா?இருக்கும் சொந்த வீட்டை உதறி விட்டு, வாஸ்து பார்த்து வாடகைக்கு வீடு தேடுவது என்னைப் பொருத்தவரை சரியாகப் படவில்லை..அந்த வீட்டைக் காலி செய்யும்படி நேர்ந்தால் என்ன செய்வது? வாஸ்து புருஷனைக் கண் விழிக்கச் சொல்லி யோசனை கேட்க வேண்டியதுதான்.


வாஸ்து, ஜோதிடம், எண் ஆராய்ச்சி எல்லாமே யதார்த்தத்துடன் இணைந்து செயல் படுவதே சிறந்தது.


பஞ்ச பூதங்கள் கூட எப்போதுமே மனிதனுக்கு நன்மை பயக்குவதில்லை . Earth quakes,எரிமலை களும், சூறாவளிகளும், காட்டாற்று வெள்ளங்களும் நாம் காணாததா?அவையும் பஞ்ச பூதங்களால் ஏற்படும் நிகழ்வு தானே?பெரிய விபத்து நேரிடும்போது, பல வீடுகள் இடிந்து சேதமடையும்போது,வாஸ்து சாஸ்திரத்துக்கு உட்பட்ட வீடு மட்டும் தப்பிக்கும் எனத் தோன்றவில்லை.போபாலில் அக்னிஹோத்திரம் செய்த குடும்பத்தினர் மட்டும் எந்த ஆபத்துக்கும் உள்ளாகவில்லை என்பதை வாஸ்துவுக்கு சாதகமாக எடுத்துக் கொள்ள இயலாது.


அளவுக்கு மிஞ்சினால் எல்லாமே ஆபத்து தான். வாஸ்துவும் அதற்கு விதி விலக்கு என நான் கருதவில்லை.


வாஸ்து நிபுணர்களுக்கு( நிபுணர் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு) மற்றவரின் குடும்ப அமைதி, மகிழ்ச்சியைவிட பணம் சேர்ப்பதுதான் குறிக்கோள்..மக்களின் மனதில் வேண்டுமென்றே பீதியைக் கிளப்பி, அதைத் தங்களுக்கு சா தகமாகப் பயன்படுத்திக் கொள்வதே அவர்களது தொழில் தர்மம்.அதற்கு இடம் கொடுக்காமல் நமது அறிவைப் பயன் படுத்துவது நமது தர்மம்.


jayasala 42






Vaasthu Sastram

Aucun commentaire:

Enregistrer un commentaire