mardi 27 janvier 2015

கிராமிய பாசம்

அது ஒரு அழகிய கிராமம் .வயல்களும் தோப்புகளும் சூழ்ந்த ஊர்.என்றும் வற்றாத ஆறு ஊரின் அருகே ஓடுவதால் தண்ணீருக்கு என்றும் பற்றாக்குறை வந்ததில்லை.வெளி ஊரில் இருப்போர் தத்தம் குடும்பத்துடன் கோடை விடுமுறைக்கு பிறந்த ஊருக்கு வருவார்கள்.ஊட்டியும

கொடைக்கானலும் யாரும் செல்வது இல்லை.சொந்த பந்தங்களுடன் உறவாடி மகிழ்வதற்காகவே உ கொண்டு கோயில்களில் திருவிழாக்கள் கொண்டாடுவார்கள்.அப்படி ஒரு பெரிய குடும்பத்தில் பிள்ளைகளும் பெண்களும் கூடி கும்மாளம் அடித்து கொண்டு இருந்தார்கள்.குழந்தைகள் தன வயது பிள்ளைகளுடன் விளையாடி கொண்டு இருந்தார்கள்.அந்த குடும்பத்தின் முதிய பெண்மணி "நான் வயலுக்கு போகிறேன்.என் கூட யார் எல்லாம் வருகிறீர்கள்" என்றார்.உடனே அவரது மகனின் குழந்தையும் மகளின் குழந்தையும் ஓடி வந்தார்கள் .அந்த பாட்டி மகள் குழந்தையை இடுப்பில் தூக்கி வைத்து கொண்டு மகனின் குழந்தையை கை பிடித்து கூட்டி சென்றார்.வயலுக்கு சென்றதும் மகளின்குழந்தை "பாட்டி இது உங்க வயலா "என்று கேட்டது.மகனின் குழந்தையோ "இது நம்ம வயலா" என்று கேட்டது.உடனே அந்த பாட்டியம்மா மகள் குழந்தையை இடுப்பில் இருந்து இறக்கி விட்டு விட்டு நடத்தி சென்ற மகன் குழந்தையை இடுப்பில் தூக்கி வைத்தாள்.

அந்த பெண்மணி செய்தது நியாயமா? மகனின் குழந்தை அந்த ஊரில் வளர்வதால் அல்லது அடிக்கடி வருவதால் அப்படி கேட்டிருக்கலாம்.மகளின் குழந்தை வருடத்துக்கு ஒரு முறை வருவதால் அந்த பிஞ்சு மனதில் அப்படி தோன்றி இருக்கலாம் .அதனால் பாட்டி அந்த குழந்தையை உடனே கீழே இறக்கி விட்டிருக்க வேண்டாம்.அதை விட "வீட்டில் இருந்து வரும் போது உன்னை தூக்கிட்டு வந்தேன்.இப்ப வீட்டுக்கு போகும் போது அவனை தூக்கிட்டு போவோம்"அப்படின்னு சொல்லி இருக்கலாம் என்பது என் கருத்து.


இது ஒரு கிராமிய கதை .இந்த கதை படித்து விட்டு உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள்






கிராமிய பாசம்

Aucun commentaire:

Enregistrer un commentaire