dimanche 28 décembre 2014

தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள்

தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள்

ரமணி

இந்த இழையில் சில ஆங்கிலப் பாவடிவங்களைத் தமிழில் முயன்று பார்க்கலாம்.


================================================== ==========

01. Pantoum: பாண்டி

Pantoum - Wikipedia, the free encyclopedia

================================================== ==========

இந்த வடிவத்தைத் தமிழில் ’பாண்டி’ என்ற பெயரில் கவிமாமணி இலந்தை இராமசாமி அவர்கள்

தம் ’சந்தவசந்தம்’ மரபுக்கவிதை இணையக் குழுமத்தில் அறிமுகப் படுத்தினார். அந்த இழை இங்கே:

https://groups.google.com/forum/#!to...am/89udbPqnL9w


இந்த pantoum--’பாண்டி’ வடிவத்தில் அளவொத்த நான்கு அடிகள் கீழ்க்கண்ட அமைப்பில் வரவேண்டும்:


Stanza 1 A B C D

Stanza 2 B E D F

Stanza 3 E G F H

Stanza 4 G I (or A or C) H J (or A or C)


This pattern continues for any number of stanzas, except for the final stanza,

which differs in the repeating pattern. The first and third lines of the last stanza

are the second and fourth of the penultimate; the first line of the poem

is the last line of the final stanza, and the third line of the first stanza

is the second of the final. Ideally, the meaning of lines shifts when they

are repeated although the words remain exactly the same: this can be done

by shifting punctuation, punning, or simply recontextualizing.


Ref: Pantoum - Wikipedia, the free encyclopedia


அதாவது, ஒவ்வொரு செய்யுளின் இரண்டாம், நான்காம் அடிகள்

அதற்கடுத்த செய்யுளின் முதலாம், மூன்றாம் அடியாக வரவேண்டும்.

இதுபோல் எத்தனை செய்யுட்களும் வரலாம். ஆனால் இறுதிச் செய்யுள் அமைப்பில்

அதன் முந்தைய செய்யுளில் அடிகள் இரண்டும் நான்கும் இதன் முதல், மூன்றாம்

அடிகளாக அமைவதுடன், முதற்செய்யுளின் மூன்றாம் அடி இதன் இரண்டாம் அடியாகவும்,

முதற்செய்யுளின் முதலடி இதன் இறுதி அடியாகவும் அமைதல் வேண்டும்.


pantoum உதாரணங்கள்:

Pantoum Poems | Examples of Pantoum Poetry - PoetrySoup


*****


இனி, நான் எழுதிய சில ’பாண்டி’க் கவிதைகள்:


வேலை எனவோ?

(ஆங்கிலப் பாவடிவம் pantoum-இன் தமிழ் வடிவாகப் ’பாண்டி’ எனப் பெயரிட்டு,

சந்தவசந்தம் இணையக் குழும ஸ்தாபகர் கவிமாமணி இலந்தை இராமசாமி அவர்கள் செய்த வடிவம்)


காலை நேரம் கதிர்வரும் போதில்

மேலைக் காற்றில் மேனியும் குளிர

சாலை வாகனம் சற்றே குறைய

காலை வீசிக் கடற்கரை சென்றாள். ... 1


மேலைக் காற்றில் மேனியும் குளிர

சேலைத் தலைப்பை சேர்த்துப் போர்த்தி

காலை வீசிக் கடற்கரை சென்றாள்

வாலைக் குமரி வயதில் இளையாள். ... 2


சேலைத் தலைப்பை சேர்த்துப் போர்த்தி

சோலைப் பூச்சரம் தலையில் ஆடிட

வாலைக் குமரி வயதில் இளையாள்

சாலை யோரம் தாள்களைப் பதித்தாள். ... 3


சோலைப் பூச்சரம் தலையில் ஆடிட

மாலைக் கதிரொளி மஞ்சள் மேனியள்

சாலை யோரம் தாள்களைப் பதித்தாள்

வேலை எனவோ? வியந்தேன் நானே! ... 4


மாலைக் கதிரொளி மஞ்சள் மேனியள்

சாலை வாகனம் சற்றே குறைய

வேலை எனவோ வியந்தேன் நானே

காலை நேரம் கதிர்வரும் போதில்! ... 5


--ரமணி, 26-27/12/2014


*****


வேரினைக் காண்பீர் விழுமமே சேரும்!

(நாற்சீர்ப் ’பாண்டி’)


’பாரத பூமி பழம்பெரும் பூமி

நீரதன் புதல்வரிந் நினைவகற் றாதீர்’*

வேரினைக் காண்பீர் விழுமமே சேரும்

காரிருள் நீங்கும் கண்ணொளி சேரும்!


’நீரதன் புதல்வரிந் நினைவகற் றாதீர்’

பாரினில் உம்போல் பார்ப்பது அரிதே

காரிருள் நீங்கும் கண்ணொளி சேரும்

நேரமும் வருமே நினைவினிற் கொள்வீர்!


பாரினில் உம்போல் பார்ப்பது அரிதே

யாரும் உம்மை ஏய்த்தல் ஆகா

நேரமும் வருமே நினைவினிற் கொள்வீர்

சாரமே கொண்டு சக்கையைத் தள்ளுவீர்!


யாரும் உம்மை ஏய்த்தல் ஆகா

தேரும் வாழ்வில் தேடியே ஞானச்

சாரமே கொண்டு சக்கையைத் தள்ளுவீர்

சீரும் சிறப்பும் செயல்வித மாகும்!


தேரும் வாழ்வில் தேடியே ஞான

வேரினைக் காண்பீர் விழுமமே சேரும்

சீரும் சிறப்பும் செயல்வித மாகும்

’பாரத பூமி பழம்பெரும் பூமி’!


--ரமணி, 27/12/2014


குறிப்பு:

முதற் செய்யுளின் முதலிரண்டு அடிகள் மகாகவி பாரதியாரின் ’சத்ரபதி சிவாஜி’

என்னும் பாடலில் இருந்து கொண்ட மேற்கோள் ஆகும்.


*****


பிள்ளையார் பிள்ளையார் பெருமைவாய்ந்த பிள்ளையார்!

(மழலையர் பாட்டு: நாற்சீர்ப் பாண்டி)


பிள்ளையார் பிள்ளையார் பெருமைவாய்ந்த பிள்ளையார்

வெள்ளையாம் ஆடையே மேனிமேல ணிந்தவர்

கிள்ளையைப் போலவர் கீர்த்தியினைப் பாடுவோம்

அள்ளியே தருவரே ஆற்றலுடன் புத்தியும்! ... 1


வெள்ளையாம் ஆடையே மேனிமேல ணிந்தவர்

உள்ளமே வந்திடில் ஊஞ்சலாடும் உவகையாம்

அள்ளியே தருவரே ஆற்றலுடன் புத்தியும்

பிள்ளைநான் பொண்ணுநீ பிள்ளையாரைப் போற்றுவோம்! ... 2


உள்ளமே வந்திடில் ஊஞ்சலாடும் உவகையாம்

துள்ளுவோம் பிள்ளையார் தோற்றமெழில் கண்டுநாம்

பிள்ளைநான் பொண்ணுநீ பிள்ளையாரைப் போற்றுவோம்

கொள்ளவே அளவினில் குறையாத செல்வமே! ... 3


துள்ளுவோம் பிள்ளையார் தோற்றமெழில் கண்டுநாம்

புள்ளிமான் ஓட்டமாய்ப் போகுமே சோம்பலும்

கொள்ளவே அளவினில் குறையாத செல்வமே

பள்ளியின் கல்வியாய்ப் பட்டறியும் ஞானமாய்! ... 4


புள்ளிமான் ஓட்டமாய்ப் போகுமே சோம்பலும்

கிள்ளையைப் போலவர் கீர்த்தியினைப் பாடுவோம்

பள்ளியின் கல்வியாய்ப் பட்டறியும் ஞானமாய்ப்

பிள்ளையார் பிள்ளையார் பெருமைவாய்ந்த பிள்ளையார்! ... 5


--ரமணி, 27/12/2014, கலி.12/09/5115


*****

================================================== ==========

02. Nonet: ஒன்பான் ஓரசை

Nonnet - Wikipedia, the free encyclopedia

================================================== ==========

A Nonnet is a type of poem which has the following requirements:

* It has nine lines

* The first line has 9 syllables, the second 8 syllables, the third 7 syllables until the ninth line which has one syllable.

* Has an iambic meter (stress every other syllable)


Example: A Bereft Mother

Poem: A Bereft Mother by Alfred Vassallo


children grew and left the nest empty

the rooms are vacant and silent

the table made for one

she feels deserted

no room to smile

worrying

about

them


தமிழ் வடிவம்: ஒன்பான் ஓரசை

01. Nonet என்பதைத் தமிழில் ’ஒன்பான் ஓரசை’ எனலாம்.


சீர்க் கணக்கு இல்லாமல் முதலடியில் ஒன்பதில் தொடங்கி ஒவ்வோர் அடியிலும் ஓரசை

குறைவாக வரவேண்டும். இரண்டு அடிகளிடை ஓரெதுகை யாகவும், இறுதி

மூன்று அடிகளிலும் ஒரே எதுகை வருமாறும் அமைக்கலாம்.


உதாரணங்கள்

இல்லம்


வீடே கலகல வென்றந் நாட்களிலே

ஊடாடும் கூட்டம் குடும்பமென

பின்னர் பிள்ளை தனிக்குடும்பம்

இன்றோ ஓர்பிள்ளை பெண்

நரைமுது பெற்றோர் தனி

திரைகடல் தாண்டிக்

கல்விவேலை

இல்லம்

இல்.


பணம்


மழைப்பொழிவு மும்மாரி அந்நாளில்

விழைபொருள் பணமென வீணர் இந்நாள்

கொலையும் கொள்ளையும் கொள்கையென

நிலையிலா மாந்தராய் வாழ்க்கை

கனவின் இலக்கு பணம்

நனவின் நன்மை

பணப் பற்று

பணமுதல்

பணம்.


--ரமணி, 27/12/2014


*****


சிவன்

(nonet: ஒன்பான் ஓரசை)


அஞ்செழுத்தில் நின்று ஆற்றுப் படுத்திப்

பஞ்ச பூதத் தண்ட மாயவை

கொள்ளும் உயிரினங்கள் அனைத்திலும்

உள்ளுறைந் தியங்கும் உண்மையாய்

உள்ளம் எட்டாத

வேதப் பரம்பொருள்

நாதபிந்து

சிவையாய்ச்

சிவன்.


--ரமணி, 28/12/2014


*****


You Might Find These Useful:





தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள்

Aucun commentaire:

Enregistrer un commentaire