jeudi 26 février 2015

ஆண்கள் கவனத்திற்கு:

ஆண்கள் கவனத்திற்கு:

===============

(மனைவியுடன் பொது இடங்களுக்கு செல்லும்போது உஷார்.)

ஒரு கணவனும் மனைவியும் லிப்ட் ல 10 வது மாடியிலிருந்து கீழே வந்து் கொண்டிருககிறார்கள்.

5வது மாடியில் அழகான இளம்பெண் ஒருத்தி லிப்ட் ல ஏறி அந்த கணவன் பக்கத்தில் நிற்க, அவன் அவளின் அழகில் மயங்கி ஜொள் விடுகிறான். சிறிது நேரத்துக்குப்பின் அவள் இவனது கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு "இனி இப்படி செய்தால் செருப்பு பிஞ்சிரும்" னு சொல்லிட்டு அவனிடமிருந்து விலகி நிற்கிறாள்.


இவனுக்கோ தன் மனைவி முன்னிலையில் அடிவாங்கிய அவமானம். லிப்ட் ல இருந்து இறங்கி வெகுநேரமாகியும் மனைவியிடம் பேச வெட்கி வாயடைத்தான். வீட்டிற்கு நடக்கிறார்கள்.


மனைவி : ஏங்க அதையே நினைச்சிகிட்டு. விடுங்க. ஏதாவது பேசிட்டு வாங்க.


கணவன் : இல்லடி, நான் லிப்ட் ல...


மனைவி : அட, அத தான் விடுங்க னு சொன்னேன். நீங்க ஜொள் விடுறத பொறுக்காம நான்தான் அவ இடுப்பைக் கிள்ளுனேன்.


கணவன் : (மீண்டும் வாயடைத்தான்)்


You Might Find These Useful:





ஆண்கள் கவனத்திற்கு:

Aucun commentaire:

Enregistrer un commentaire