எத்தனை உயரம் பறந்தாலும்
நூலே பட்டத்தின் ஆதாரம்!
இதை மறந்தால் நிச்சயம் ஒரு நாளும்,
எப்பட்டமும் அடைந்திடும் சேதாரம்!
மறவோம்!
நூலே பட்டத்தின் ஆதாரம்!
இதை மறந்தால் நிச்சயம் ஒரு நாளும்,
எப்பட்டமும் அடைந்திடும் சேதாரம்!
நாம் கடந்த பாதையினை என்றும்
மறவாதிருத்தலே பண்பாகும்!
நமக்குதவிய மனிதரிடம் நாளும்
நன்றி பாராட்டுதல் கடனாகும்!
நம் கடனை நாம் திருப்பும் விதமாய்
நாமும் நமை விட தாழ்ந்தோருக்கு
உதவிட வேண்டும்! பிரதிபலனாய்
எதையும் கோராதிருப்பின் வெகுசிறப்பு!
எங்கிருந்து வந்தோம்? தெரியாது?
எங்கே போவோம்? சொல்வார் ஏது?
இங்கிருக்கும் வரையில் உதவிடுவோம்!
இல்லையெனில் விலங்கினும் கீழாவோம்!
மறவோம்!
Aucun commentaire:
Enregistrer un commentaire