கலைமகள் கைப்பொருளே தமிழே
உன்னை கவனிக்க ஆள் இல்லையே
விலை இல்லா மாணிக்கமே
உன்னை எழுதவும் விரல் இல்லையோ
உன்னை கவனிக்க ஆள் இல்லையே
விலை இல்லா மாணிக்கமே
உன்னை எழுதவும் விரல் இல்லையோ
நான் யார் உன்னை மீட்ட
நன்மைக்கும் தீமைக்கும் வழி காட்ட
ஏனோ துடிக்கின்றேன்
ஒரு நிலையில்லாமல் தவிக்கின்றேன்
விலையில்லா தீந்தமிழே
உன்னை வர்ணிக்க ஆள் இல்லையோ
அழகும் இனிமையும் உன் வசமே - நான்
சொல்வதை பிறர் மனம் கேட்கணுமே
சத்தியம் தர்மங்கள் நிலைக்கட்டுமே உன்
பெருமையின் குரல் தான் முழங்கட்டுமே
கலைமகள் கைப்பொருளே
உன்னை கவனிக்க ஆள் இல்லையே
விலையில்லா தீந்தமிழே
உன்னை எழுதவும் விரலில்லையோ
கலைமகள் கைப்பொருளே -தழுவல்
Aucun commentaire:
Enregistrer un commentaire