கோயிலுக்குப் பக்கத்தில் கார் துடைக்கக் காத்திருப்பாய்
கூட்டமுள்ள ஹோட்டல்களில் சாப்ட்டவுடன் ப்ளேட் எடுப்பாய்
பாயின்றி படுத்திருப்பாய் பிளாட்பாரத்தில் குளிப்பாய்
பட்டரையில் வெட்டிரும்பால் பகல் இரவாய்த் தட்டிடுவாய்
சாயங்கால சமுத்திரத்தின் அருகில் சுண்டல் விற்பாய்
சந்துகளில் இருட்டில் பெண்களுக்காய் ஆள் பிடிப்பாய்
காஜா அடிப்பாய் கட்டடத்தில் கல்லுடைப்பாய்
கார் அடியில் படுத்திருந்து கறுப்பாய் எழுந்திருப்பாய்
மேஜை துடைப்பாய் மேட்டினியில் இடிபடுவாய்
மெதுவாக என்னிடத்தில் கருப்பிலே சீட்டு விற்பாய்
கூஜா எடுத்துப்போய் குடிதண்ணீர் கொணர்வாய்
கூட்டத்தில் கரைந்து பாக்கெட்டைக் கத்தரிப்பாய்
ராஜாவே உனக்கென்றே நாங்கள் இவ்வருஷம்
ராஜ்ஜியம் முழுவதும் விழாவெடுக்கப் போகின்றோம்.
திரைப்படங்கள் எடுப்போம் தின்பண்டங்கள் தந்திடுவோம்
தீவிரமாய் உன்நிலைமை உயர்த்துவது பற்றி
வரைபடங்கள் வரைந்து வாதாடிப் புகைபிடித்து
வருங்காலக் கனவுகளை வண்ணங்களாய்த் தருவோம்
குறைப்பட்டுக் கொள்ளாதே கொஞ்சநாள் பொறுத்திரு
கூட்டங்கள் கூட்டி குளிர்சாதன அறைக்குள்
சிறைப்பட்டு சிந்தித்து சீக்கிரமே முடிவெடுப்போம்
சில்லறையாய் இல்லை போய்விட்டு அப்புறம் வா!
ஒரு பிச்சைக்காரன் தினமும் தன பையனுடன் பிச்சை எடுக்கச் செல்வது வழக்கம்.
SILLARAI ILLAI,POI vittu appuram vaa

ஒரு நாள் அவன் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு முதல் பரிசு விழுந்தது.
தந்தை:இந்த பணத்தில் நாம் ஒரு கார் வாங்கலாண்டா ராசா பயலே.
மகன்;ஹையா , இனிமல் காரில் போய் பிச்சை எடுக்கலாம், இல்லியா நைனா
Jayasala 42
You Might Find These Useful:
SILLARAI ILLAI,POI vittu appuram vaa
Aucun commentaire:
Enregistrer un commentaire