vendredi 29 août 2014

Ganesha and Ravana

ஒரு புராண வரலாறு .இராவணன் கயிலை சென்று சிவபிரானை வழிபட்டு "அடியேன் மூன்றரைக் கோடி ஆண்டுகள் அழியாது வாழவும் இலங்கை மாநகரம் அழிக்கப் படாமல் இருக்கவும் ஒரு சிவ லிங்கம் தந்தருள வேண்டினான்

சிவபிரான் ஒரு சிறிய லிங்கத்தை அளித்து " எந்த வாகனத்திலும் ஏறாது நடந்து சென்று, கீழே எங்கும் வைக்காமல் லிங்கத்தை இலங்கை எடுத்துச் சென்று வழிபட்டால் உன் விருப்பம் நிறைவேறும் என்றார்.


இராவணன் பய பக்தியுடன் இலங்கை நோக்கிப் பயணித்தான்.


ராவணனை அழிக்க இயலாதோ என அஞ்சிய தேவர்கள் ஐங்கரனைத் துதித்தனர்.


விநாயகரின் ஆணைப்படி வருணன் ஏழு நதிகளையும் இராவணன் வயிற்றில் நிரப்பச் செய்தார்.


ராவணன் கையில் சிவ லிங்கத்தை வைத்துக் கொண்டு சிறுநீர் கழிக்க இயலாமல் தவித்தான்.


அப்போது விநாயகர் சிறுவன் வடிவில் தோன்றவும், அவரிடம் சிவலிங்கத்தைக் கொடுத்து விட்டு சிறுநீர் கழிக்கச் சென்றான் .


வருணன் நிரப்பிய நீர் நில்லாமல் சுரந்த வண்ணம் இருக்க விநாயகர் லிங்கத்தை நிலத்தில் வைத்து விட்டார்.


திரும்பி வந்த ராவணனால் சிறு லிங்கத்தைப் பெயர்க்க முடியவில்லை.முழு வலிமையுடன் இழுக்கவும் சிவலிங்கம் பசுவின் காது போல் குழைந்து விட்டது.மேற்குக் கடற்கரையில் கோகர்ணம் என்ற பெயருடன் இன்றும் விளங்குகிறது.


இராவணன் கடும் கோபம் கொண்டு விநாயகரின் தலையில் குட்ட ,விநாயகர் விண்ணளவாக உயர்ந்து ராவணனை பந்தாடினார்.கடைசியில் ராவணன் அவரது காலடியில் வீழ்ந்து மன்னிப்பு வேண்டினான்.தன பத்துத் தலைகளிலும் இருபது கரங்களால் பல முறை மாறி மாறிக் குட்டிக் கொண்டபோது உதித்த ஓசைதான் சதுஸ்ரம்,திஸ்ரம்,கண்டம், மிஸ்ரம் ,சங்கீர்ணம் எனப்படும் ஐந்து தாள வகைகள் என்று கூறப் படுகிறது.


இராவண வதத்துக்கும்,இசையின் பிதா என்று அழைக்கப் படும் லயத்துக்கும் வழி வகுத்தவர் நம் பிள்ளையார்தான்.


இதேமாதிரி ராமர் வீடணனுக்கு அளித்த ரங்கநாத விக்ரஹத்தையும் திருவரங்கத்தில் ஆராதிக்கப் படச செய்த பெருமையும் கணபதியையே சாரும்.

Jayasala42






Ganesha and Ravana

Aucun commentaire:

Enregistrer un commentaire