அறுகு ஓரிடத்தில் முளைத்து ,கொடி போல் நீண்டு ஆறு இடங்களில் வேரூன்றிக் கிளைக்கும் தன்மையதால் அறுகம் புல் என்று பெயர் வந்ததாகத் தெரிகிறது.
இந்த அறுகை அர்ச்சித்தால் மூலாதாரத்தில் விளங்கும் விநாயகர் ஆறு ஆதாரங்களிலும் நம்மைப் பொருந்தச் செய்து அருள் புரிவார் என யோக நூல்கள் அறிவிக்கின்றன.
யோகிகள் கடும் யோகப் பயிற்சியால் விளையும் சூடு தணிய அறுகுக் கஷாயம் அருந்துவர்.
யமன் மகனாகிய அனலாசுரன் இந்திராதி தேவர்களை விழுங்க் முயற்சித்தபோது விநாயகர் அனலாசுரனை விழுங்கவே அவர் திரு மேனியில் கடும் வெப்பம் எழுந்தது.
அந்த வெப்பம் தணிய சந்திரன் குளிரமுதம் ஊட்டினான்.
சித்தி புத்திகள் தமது குளிர்ந்த உடலால் ஒற்றினார்கள்.
திருமால் தாமரைப் பூவால் தடவினார்.
வருணன் குளிர்ந்த நீரால் திருமஞ்சனம் செய்வித்தான்.
சிவா பெருமான் ஆதிசேஷனைக் கொண்டு ஒற்றச் செய்தார்.
ஆனால் வெப்பம் தணிந்தபாடில்லை.
எண்ணாயிரம் முனிவர்கள் ஒவ்வொருவரும் 21 அறுகை இட்ட நீரைத் தனித்தனியே சொரிந்தனர். வெப்பம் தணிந்தது.அதனால் அறுகு விநாயகருக்கு விருப்பமானது.
பணம் செலவழித்து மலர் வாங்க இயலாதவர்கள் தரையில் கேட்பாரற்றுக் கிடக்கும் அறுகம் புல்லைப் போட்டாலும் விநாயகர் அருளுவார்.
Jayasala 42
Arukam Grass
Aucun commentaire:
Enregistrer un commentaire