samedi 20 juin 2015

இருமல், சளி நிவாரணம் தரும் லிங்க முத்ரா


--

எப்பொழுது பார்த்தாலும் இருமல், சளி உங்களை
வாட்டி எடுத்தால் அதற்கு லிங்கமுத்ரா பயிற்சி
செய்வது பலன் தரும்
-
இதை தொடர்ந்து செய்வதால் இருமல், சளியிலிருந்து
முற்றிலும் குணமடையலாம்.
-
முத்ரா பயிற்சியானது மின்காந்த அலைகளை உடலில்
ஏற்படுத்தி உடலில் சில மாற்றங்களை விளைவிக்கிறது.
முத்ரா பயிற்சியை எந்த நேரத்திலும் செய்யலாம்.
-
இந்த பயிற்சி செய்வதற்கு மிகவும் எளியது.
இரண்டு கைகளின் விரல்களையும் ஒன்றோடு ஒன்று
கோர்த்து இடது கை பெருவிரலை மட்டும் நிமிர்த்தி
வைத்துக் கொள்ளுங்கள்.
-
இப்பயிற்சிக்கு லிங்க முத்ரா என்று பெயர்.
இந்த முத்ரா பயிற்சி இருமல், சளி போன்ற
நோய்களிலிருந்து குணமாக்கும் வல்லமை உடையது.
இந்த முத்ரா ஒரு முறை செய்து விட்டு பலன் இல்லை
என்று நினைக்க கூடாது. ஒரு செயலை தொடர்ந்து
செய்வதன் மூலமே முழு பலனை அடைய முடியும்.
-
இதனை குறைந்தது 5 நிமிடம் முதல் எவ்வளவு நிமிடம்
வேண்டுமானாலும் செய்யலாம். தொடர்ந்து செய்வதன்
மூலம் நல்ல பலனை பெற முடியும்.
-
-----------------------------------
நன்றி- மாலை மலர்



இருமல், சளி நிவாரணம் தரும் லிங்க முத்ரா

Aucun commentaire:

Enregistrer un commentaire