mercredi 24 juin 2015

வைரமுத்துவின் வெள்ளை பணியாரப் பாடல் - ரீம

வைரமுத்துவின் வெள்ளை பணியாரப் பாடல் - ரீமிக்ஸ் :)

வயித்துக்குள்ளே உன்ன முடிஞ்சிருக்கேன்

வயித்துக்குள்ளே உன்ன முடிஞ்சிருக்கேன்
இங்க யார் வீட்டில் பணியாரச்சட்டி கொதிச்சிருக்கோ
வெள்ளை பார்வை வீசிவிட்டாய் முன்னாடி
இதத் தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி

வெள்ளை பணியாரம் வலதுகை கெடியாரம்
ஆணை பசி எல்லாம் அடக்கும் உன் ருசியாரம்

நீ போன பின்னும் சுவை மட்டும் போகலையே போகலையே
நெஞ்சு குழியிலே நிழல் வீழ்ந்துடுச்சி
அப்ப சாப்ட்வ தான்
அப்புறமா சாப்டலையே சாப்டலையே
கொடக்கம்பி போல மனம் குத்தி நிக்குதே

வயித்துக்குள்ளே உன்ன முடிஞ்சிருக்கேன்

வயித்துக்குள்ளே உன்ன முடிஞ்சிருக்கேன்
இங்க யார் வீட்டில் பணியாரச்சட்டி கொதிச்சிருக்கோ

பச்சி ஒறங்கிருச்சு பால்தயிராத் தூங்கிருச்சு
இச்சி மரத்து மேல எல கூடத் தூங்கிருச்சு
காச நோய்க் காரிகளும் கண்ணுறங்கும் வேளையில,
பசி நோய் வந்தமக அரை நிமிசம் தூங்கலையே
வயித்துக்குள்ளே உன்ன முடிஞ்சிருக்கேன்
இங்க யார் வீட்டில் பணியாரச்சட்டி கொதிச்சிருக்கோ

ஒரு வாய் எறங்கலையே உள்நாக்கு நனையலையே
ஏழெட்டு நாளா எச்சில் முழுங்கலையே
ஏழை இளஞ்சிறுக்கி ஏதும் சொல்ல முடியலையே
ரப்பர் வளவிக்கெல்லாம் சத்தமிட வாயில்லையே
வயித்துக்குள்ளே உன்ன முடிஞ்சிருக்கேன்
இங்க யார் வீட்டில் பணியாரச்சட்டி கொதிச்சிருக்கோ
வெள்ளை பார்வை வீசிவிட்டாய் முன்னாடி
இதத் தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி

வெள்ளை பணியாரம் வலதுகை கெடியாரம்
ஆணை பசி எல்லாம் அடக்கும் உன் ருசியாரம்

நீ போன பின்னும் நிழல் மட்டும் போகலையே போகலையே
நெஞ்சு குழியிலே நிழல் வீழ்ந்துடுச்சி
அப்ப சாப்ட்வ தான்
அப்புறமா சாப்டலையே சாப்டலையே
கொடக்கம்பி போல மனம் குத்தி நிக்குதே
வயித்துக்குள்ளே உன்ன முடிஞ்சிருக்கேன்

வயித்துக்குள்ளே உன்ன முடிஞ்சிருக்கேன்
இங்க யார் வீட்டில் பணியாரச்சட்டி கொதிச்சிருக்கோ

You Might Find These Useful:


வைரமுத்துவின் வெள்ளை பணியாரப் பாடல் - ரீ&#2990

Aucun commentaire:

Enregistrer un commentaire