-
மதுரைக்குத் தொடர்வண்டியில் வந்து இறங்கினார்
ஒருவர். குறித்த நேரத்துக்கு முன்பே தொடர்வண்டி
வந்துவிட்டதால், அவரை வரவேற்க ஒருவரும் அங்கு
இல்லை. அவர் யாருக்காகவும் காத்திராமல், தான்
தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
விடுதிக்குச் சென்று அறையின் திறவுகோலைக்
கேட்டார்.
ஆனால் அங்கிருந்தவர்களோ, ""இந்த அறை தொடர்
வண்டித்துறை அமைச்சர் ஒருவருக்காகப் பதிவு
செய்யப்பட்டிருக்கிறது. உங்களுக்குத் தர முடியாது..''
என்று மறுத்தார்கள்.
""ஐயா, அந்த அமைச்சரே நான்தான்'' என்று கூறிய
பிறகும்கூட அவர்கள், அதனை நம்ப மறுத்து அவரை
உள்ளே விடவில்லை. அவரின் எளிமையான தோற்றமே
அதற்குக் காரணம்!
அதற்குள் அமைச்சர் மதுரை வந்துவிட்டார் என்ற
தகவலை அறிந்து அவரைப் பார்ப்பதற்காக
தொண்டர்கள் வந்தனர். அவர்கள் வந்த பிறகுதான்
அவர்தான் அந்த அமைச்சர் என்பது
அங்கிருந்தவர்களுக்குப் புரிந்தது.
அவர் யார் தெரியுமா? அவர்தான்
லால் பகதூர் சாஸ்திரி. மறைந்த முன்னாள் பாரதப்
பிரதமர். மிகப் பெரிய பதவியிலிருந்தும் எளிமையாக
வாழ்ந்து காட்டினார்.
-
-------------------------------------------------
-மு.அஜீத், மன்னார்குடி. (சிறுவர் மணி)
எளிமை!
Aucun commentaire:
Enregistrer un commentaire