உணர்வுக்கு காதல் என்று பெயர் சூட்டி
இம்மானுடமும் தான் மயங்கிடுதோ
காதலில் சிக்குண்டு திருமணம் என்ற பெயரில்
ஒருவர் மனதை ஒருவர் ஆளும்
எண்ணத்தில் காதலும் கரைந்திடுதோ
கண்கள் காணா காதலிலே உள்ளத்தை
மட்டும் நேசிக்கும் காதலில்
உணர்வுகள் தோற்று காதல் பெருகிடுதோ
புறக்கண்கள் காண மறுத்ததை அகக்கண்கள்
கண்டுகொள்ள பயனற்று போகிறதே
புறகண்ணின் புரிதலும் தான்
உணர்வுகளை நீக்கி அகத்தை மட்டும்
நேசித்தால் காதலின் பெயரில்
தோற்று தான் போகாது பலரது வாழ்வும்
பி.கு: குக்கூ படத்தின் தாக்கம்
கண்காணா காதல்
Aucun commentaire:
Enregistrer un commentaire