mardi 23 juin 2015

புத்தகம்!

ஒருசமயம், நேரு வெளியூர் பயணம் கிளம்பினார்.
போய் வரக் கிட்டத்தட்ட 10 மணி நேரம் ஆகும்.
இதற்காக 50 புத்தகங்களை நேரு எடுத்து வைத்தார்.
இதைக் கவனித்த, அவரது மகள் இந்திரா காந்தி,
"அப்பா, இவ்வளவு புத்தகங்களையும் உங்களால்
எப்படி இந்தப் பயணத்தில் படிக்க முடியும்?'' என்று
கேட்டார்.

அதற்கு நேரு, ""உண்மைதான்... இவ்வளவு
புத்தகங்களையும் என்னால் படிக்க முடியாதுதான்.
ஆனால் நூல் எழுதிய அறிஞர்கள் எல்லோரும் என்
கூட இருப்பதுபோல நான் உணர்வேன் அல்லவா?
இந்தத் துணை அபார சக்தி கொண்டது. அதனால்
தான் இவ்வளவு புத்தகங்களையும் எடுத்துச்
செல்கிறேன்'' என்று கூறினார். அந்தளவுக்குப்
புத்தகப் பிரியர் நேருஜி.
-
-------------------------------------------------
-இ.ராஜுநரசிம்மலு, சென்னை. (சிறுவர் மணி)



புத்தகம்!

Aucun commentaire:

Enregistrer un commentaire