அவள் :
மாட்டு வண்டி பூட்டிக் கிட்டு
பாட்டையிலே ஓட்டிக்கிட்டு
காட்டுவழி போரவரே
வீட்டுக்கு நாம் போவதெப்போ ?
அவன் :
கூட்டிக்கிட்டுப் போறேன் புள்ள
ஓட்டிவந்து நில்லு உள்ள !
தொட்டுக்கிட்டு கன்னத்துல
கட்டிமுத்தம் தாடிப் புள்ள !
அவள் :
ஒட்டிநிக்க வேளை வ(ரவி)ல்லை !
கட்டிமுத்தம் நானும் த(ரவி)ல்லை !
விட்டுவிடு இந்த ஆசை
தட்டிவிடு வண்டிக் காளை !
அவன் :
வெட்டவெட்ட ஆசையெல்லாம்
முட்டுமடி சின்னப்புள்ள !
மெட்டுக்கட்டிப் பாடச் சொல்லி
தட்டுதடிக் காதல் உள்ள !
அவள் :
இட்டுக்கட்டிப் பாடிப்புட்டா
சிட்டு வந்து ஒட்டாதையா !
கட்டிக்கிட்டப் பின்னாடிதான்
கெட்டிப்படும் வாழ்க்கயையா !
அவன் :
சட்டுன்னுதான் சொல்லிப்புட்ட
வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு !
கெட்டிமேளம் கொட்டித் தாலிக்
கட்டுரேண்டி நேரம் பார்த்து !
Regards,
Pavithra
கிராமத்துக் காதல் !!
Aucun commentaire:
Enregistrer un commentaire