jeudi 25 juin 2015

saapamum vaazhththum

சாபமா? வாழ்த்தா?

அந்த காலத்தில் அரசர்களைத் துதித்து பரிசில் பெற்ற புலவர்கள் உண்டு. பணம் கொடுக்காவிடில் நிந்தா ஸ்துதி பாடிய புலவர்களும் உண்டு. காளமேகப் புலவர் எழுதிய நிறைய பாடல்கள் நிந்தனை செய்வது போல் வாழ்த்தியதாக எழுதப் பட்டவை.எனது பாட்டி இது மாதிரி பேசுவதில் வல்லவள்.

ஊரில் யாருக்கு வேண்டுமானாலும் என்ன உதவி வேண்டுமானாலும் செய்வாள்.மருத்துவ வசதி இல்லாத காலங்களில் பாட்டிதான் பிரசவ காலத்தில் மருத்துவம் பார்ப்பாள் .அவளை ஊர்ப் பாட்டி என்று தான் எல்லோரும் அழைப்பர்.கல்யாண தம்பதி அவளிடம் தான் முதல் ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ளுவார்கள். அவளிடம் ஆசி பெற்றால் எல்லாம் சுபம் தான் என்ற ஆழ்ந்த நம்பிக்கை.

திருமண தம்பதி காலில் விழுந்து நமஸ்காரம் செய்ததும் அவள் சத்தமாக இப்படித்தான் வாழ்த்துவாள்.

" ஓலமிட,

பொட்டு அழிய,

பூ உதிர ,

தாலி பெருக '

இதைக் கேட்டாலே நாராசமாகத் தோன்றும். அதுவும் புது மண தம்பதியைப் பார்த்து இப்படியா வாழ்த்துவது?

ஆயினும் இப்படி வாழ்த்தும் பாட்டியிடம் ஆசீர்வாதம் பெற யாரும் தயங்கவில்லை/

இந்த கேள்வியைத் தான் என் அம்மாவிடம் நான் கேட்டேன்.இ ந்த பாட்டி என் அப்பாவின் அம்மா. என் அம்மாவின் தாய் வழிப் பாட்டி.

என் அம்மா கொடுத்த விளக்கம்.

ஓலம் இட ​---இந்த பெண் பிரசவ வலி யால் துடிக்க வேண்டும்( சீக்கிரமே குழந்தை பாக்கியம் பெற வேண்டும்)

பொட்டு அழிய ----சின்ன குழந்தைக்கு அம்மாவின் நெற்றியிலுள்ள பொட்டு தான் முதல் குறி .எப்போதுபார்த்தாலும் பொட்டை அழித்துக் கொண்டே இருக்கும்.அதுவும் sticker போட்டு என்றால் கேட்கவே வேண்டாம். அதை உரித்து எடுப்பதும் உடலில் கை, கால் எல்லா இடத்திலும் ஒட்ட வைத்து வேடிக்கை பார்க்கும்.( அதாவது சின்னக் குழந்தையுடன் அந்த பெண் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருப்பாள் என்று பொருள்)

பூ உதிர ​--- குழந்தை அம்மாவைச் சுற்றிச் சுற்றி விளையாடும் பொது தலைப் பின்னலி லுள்ள பூவைப் பிடித்து இழுத்து விளையாடும். பூ உதிரும்போது கை கொட்டி சிரிக்கும் .( குழந்தை தாயுடன் ஒட்டி உறவாடும் )

கடைசி வாழ்த்து​-- இது மிக மிக அமங்கலமாகவே தோன்றும்.ஆனால் இது தான் எல்லாப் பெண்களுக்கும் மிகவும் பிடிக்கும் என்று என் அம்மா சொல்வாள்.

தாலி-பெருக --எனும் வார்த்தை "தாலி அறுந்து போதல் ' என்று தான் பொருள் படும். பாட்டியின் வாழ்த்துப் படி இதுஆண் குழந்தை பிறப்பதற்கான வாழ்த்தாம்.குழந்தை தன தாயின் மார்பிலிருந்து பால் பருகும் போ து அளவில்லா மகிழ்ச்சியுடன் உல்லாசமாகக் கை கால்களை ஆட்டிக் கொண்டே பால் குடிக்கும். குழந்தைக்குக் கைக்கு அடவாக இருப்பது அம்மாவின் கழுத்திலுள்ள தாலிக் கயிறு. அதைத் கை விரல்களால் வேகமாகப் பிடித்து இழுத்துக் கொண்டே பால் குடிக்கும்.சாதாரணமாக ஆண் குழந்தைகள் மிக வேகமாகத் தாலியைப் பிடித்து இழுக்கும் போது அது அறுந்து போய்க் கீழே விழும் வாய்ப்பு அதிகம். ஆண் குழந்தை, அதுவும் பலம் பொருந்திய( strong and healthy ) ஆண் குழந்தை பிறக்கும் என்றால் தாயின் மகிழ்ச்சிக்குக் கேட்கவா வேண்டும்?

சாண் பிள்ளை ஆனாலும் ஆண் பிள்ளை 'என்ற ஆண் ஆதிக்க சமுதாயத்தை ஆதரிக்கும் பெண்களுக்கு இந்த ஆசி பெரும் பாகயமாகவே தோன்றியிருக்கலாம்.

பாட்டி ஆசி பெற்ற 99% பெண்களுக்கு ஆசி பலித்திருக்கும் .

தொட்டதெற்கெல்லாம் அபசகுனம், அச்சானியம் பார்த்த அந்த நாளில் பாட்டியின் ஆசியை ,உள் அர்த்தம் பார்த்துப் புரிந்து கொண்டு எப்படி ஏற்றுக் கொண்டார்கள் என்பது புரியாத புதிர்தான்.

பாட்டியின் ஆசியை ராசியாக மதித்தது ஆச்சரியம் தான்.

ஜெயசாலா 42

There was my grand oldma-She was called as the patti of the village. All couples after marriage would seek her blessings.

Her blessings were of a different style altogether.
She would say in Tamil
" olam ida,pottu azhiya, poo uthira , thali peruga'

Literally this means" Let there be laments,Let your tilakam get removed.

Let your flowers scatter. and let your thali get cut off)

What an inauspicious blessing for a newly wedded ones!.Still people would come to her eagerly longing to listen to this apparently inauspicious blessing. Because for 80 long years they had her blessings and their families prospered.
Real meaning:-
Olam ida_Let the girl cry out of delivery pangs.

Pottu Azhiya:You will be blessed with a child soon. Children of seven or 8 months are crazy about removing the tilak on their mother's forehead.Not to talk of sticker tilakm which babies find interesting to remove.

Similarly a child of two or three will go round his/her mother to pull the flowers from her plaits of hair.

The last one which looks more inauspicious means:-You will have a healthy strong child. When the mother feeds the baby, the child is all happy and often holds the thali thread in its hands and go on pulling the same with much enthusiasm( almost all mothers would have experienced this) the grandma blesses that the child be so strong ,that as she suckles and pulls the thali with great force and strength the, there is a possibility of thali getting cut off.Normally it was believed male babies pull it with great force.So this is indicative of birth of a male child.

The villagers were fond of her blessing and brought even their relatives .It was believed that my patti's blessings would necessarily bring in child birth at home.
Even now I wonder how in those days dominated by bad sakuns ,people were desirous of seeking her blessings.Perhaps they had great faith in her rasi.

jayasala 42



saapamum vaazhththum

Aucun commentaire:

Enregistrer un commentaire