அழகிய தாமரையே
உன் முகத்தில் ஏன் கரும்புள்ளி
சூரியனை கண்டதும்
நாணத்தில் முகம் சிவக்கும் நீ
இன்று காகிதத்தால்
முகம் துடைத்து
அழகிழந்து நிற்கிறாயே
தண்ணீர் இலை தாமரையாக
பற்றற்று இருந்தாயே
இன்று பகட்டு வாழ்க்கைக்கு
ஆசைப்பட்டு புனிதத்தை
இழந்து நிற்கிறாயே
சுயத்தை இழந்து
நிற்கும் தாமரையே
இது காலத்தின் கோலமா
அல்லது ஜனநாயகத்தின் அவலமா