தலைக்கேற அகந்தை ஆகிறதோ ?
மனதின் பாரம் தாங்காமல்
தலைக்கேறினாலும் தலைகனம் ஆகிறதே
பூமியும் தன் பாரத்தை தாங்காமல்
அவ்வப்போது திறந்து கொள்கிறதே
மனம் மட்டும் விந்தை தான்
அத்தனை பாரத்தையும் தாங்கி
நிலையாக இருக்கிறதே
சிறு தீப்பொறி போதுமே
ஒரு காடு பற்றி எரிய
தீப்பொறியாய் எண்ணங்கள்
மனதில் இருந்தாலும்
சிறு கண்ணீர் மழையிலேயே
அணைந்து விடுகிறதே
உணர்வுகளின் உறைவிடமாய் விளங்கும்
மனம் என்ற ஒன்றை
மௌனமாய் தனிமையில்
கடந்து விட்டால்
இப்பிறப்பையும் இறப்பையும்
சேர்ந்தே கடந்து விடலாமே
வாய்க்குமா அந்த பேறு ?
மனம்
Aucun commentaire:
Enregistrer un commentaire