வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று
வள்ளுவர் சொல்கிறார் விருந்தென வருபவருக்கு நாளும் விருந்தளித்தால், அளிப்பவர் என்றும் சிறப்பர் என்று.
விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள் தான் என்றும் சொல்லக் கேட்டிருக்கிறோம். வள்ளுவர் சொன்னாரேன்னு இங்கிதம் தெரியாதவர்களுக்கு நாளும் விருந்தளித்தால் நமைப் போன்ற முட்டாள் வேறெங்கும் இல்லை ன்னு ஆயிடும்ல. :)
நல்லா வித விதமா வெட்டியா இருப்பவருக்கு வாய்க்கு ருசியா சமைச்சு போட்டால், அவரும் சிவனேன்னு இருந்து ரொம்பவே உப்பிடுவாரு. ஒல்லியா வீட்டுக்கு வந்தவரு நல்லா உண்டு உறங்கி, வெளில போக முடியாத அளவுக்கு உப்பிட்டா, நம்ம பாடு திண்டாட்டம் - உப்பியவரை வெளியே அனுப்ப, நிலை வாசலையும் அகலப்படுத்தும் நிலைக்கு வந்துடுவோம் அப்புறம். :)
உப்பிட்டவரை உள்ளளவும் நினை ன்னு சொல்லிருக்காங்க. இத ஏன் சொன்னாங்க? விருந்தில் உப்பின் பங்கு மிக முக்கியம், கூடினாலும், குறைந்தாலும் சுவை மாறிவிடும். அளவான உப்பிட்டு, அளவில்லா அன்பை பரிமாறுபவரை உள்ளளவும் நினைக்க வேண்டும் என்று அர்த்தம்.
அப்படி பரிமாறுபவர் கஷ்டத்தில் இருந்தால் மறக்காமல் உதவி செய்வது மிக முக்கியம். இதைத் தான் வள்ளுவர் சொன்னார் - விருந்தோம்பியவர் என்றும் சிறப்பர் என்று.
உப்பில்லா பண்டம் குப்பையிலே - அளவான உப்பும், அளவற்ற அன்பும் மிக முக்கியம் வாழ்க்கை சுவை பட.
உப்பின்றி அல்லது தூக்கலாக உப்பிட்டால், சாப்பிட்டவர் துப்பி விட்டு துப்பு(துப்பி)க் கெட்டவன் வீட்ல சாப்பிட்டது தவறென ஓடாமல் இருக்குமாறு கவனமா இருக்கணும். :)
உன் சமையல் அறையில் நான் உப்பா சர்க்கரையா ன்னு ஒரு பாட்டும் இருக்கு. உப்பும் போடும் பதார்த்தத்தில் உப்பாகவும், சர்க்கரை போடும் பதார்த்தத்தில் சர்க்கரயாகவும், யதார்த்தமாக இருப்பது தானே முக்கியம்.
அடடா இன்னிக்கு என்னாச்சு இவனுக்கு என நீங்கள் படித்துத் துப்பும் முன் ஓடிடறேன் இங்கிருந்து. :):):)
விருந்துக் குறளும் உப்புப் பழமொழியும்...
Aucun commentaire:
Enregistrer un commentaire