இருப்பவரிடம் இல்லாதது ஏன்?
இல்லாமல் போவோம் எனத் தெரிந்தும்,
இருப்போரிடம் சண்டை போடுவதேன்?
நில்லாமல் காலம் ஓடிக் கொண்டிருக்க,
நிற்காதா அது, ஏன் ஏங்குவதேன்?
நிலைக்காது எனத் தெரிந்தும் மறக்க
நினையாமல், அழுது புலம்புவதேன்?
முடியாது என்றே நினைத்து நாம்
முனையாமல் விலகிப் போவதுமேன்?
முனையாமல் தோற்று விட்டதும் நாம்
மறக்காமல் பிறரை நோவதுமேன்?
விடியாமல் போகாதென்றே நாம்
விரைவாக உணரத் தயங்குவதேன்?
விதியே என நொந்த வண்ணந் தான்
வீணில் வாழ்நாளைக் கழிப்பதுமேன்?
ஏன்?
Aucun commentaire:
Enregistrer un commentaire