mercredi 29 avril 2015

சின்னஞ்சிறியது!

அங்கேயே இன்னும் இருக்கிறது அச்சிறு வீடு.
சமையலறை மற்றும் வரவேற்பறை மட்டுமுண்டு.
சிறிய சாளரங்கள் மற்றும் எளிய கதவுகளோடு,
மறக்கவே முடியாத பல அற்புத நினைவுகளோடும்.

அங்கு தான் கழிந்தது என் குழந்தைப் பருவம்.
எப்போதும் விருந்தினர் வருகை அங்கு உண்டு.
பல இரவுகள் நாங்கள் சுற்றித் திரிந்த தெருவும்
மாறி விட்டாலும், மாறவே இல்லை அந்த வீடு.

சின்னத் தம்பி பிறந்ததும் , எங்கள் பாட்டி இறந்ததும் ,
சகோதரி அழுது கொண்டே மறுவீடு சென்றதும்,
நாங்கள் சண்டையிட்டதும், பகிர்ந்து கொண்டதும்,
ஒவ்வொருவரைப் பிரியும் போதும் அழுததும்,

இங்கு தான் என்று எண்ண, மலைப்பு வருகிறது.
இன்று தான், சற்று முன்பு தான் அதை விற்றோம்!
இனி இங்கு வர முடியாதென்பதில் முடிகிறது
இந்தச் சிறியேனின் சின்னஞ்சிறு வாழ்வு முற்றும்!



சின்னஞ்சிறியது!

Aucun commentaire:

Enregistrer un commentaire