தேடுகிறோம் எனத் தெரிகிறது
தேடித் தேடித் தொலைக்கிறோம் தெரிகிறது
தேடுவது யாதென தெரிந்தால் நன்றாயிருக்குமே
தொலை தூரத்தில் இருக்கிறாயா
தொல்லை தர இருக்கிறாயா
தொல்லை இல்லை
முல்லை தான்
உன்னுள்ளே
இருக்கும்
முல்லை
என
சொல்லி
முள்ளாய்
குத்தாதே
முல்லை மனம்
பரப்பி முன்னே என் முன்னே
கண் முன்னே வந்துவிடேன் என்
முல்லையே தேடித் தொலைய விடாதே...
தேடுவது யாதோ...
Aucun commentaire:
Enregistrer un commentaire