ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு
தங்கம் உள்பட
மூன்று பதக்கங்கள்
கிடைத்தது!

ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும்
அளவிட முடியாத
சந்தோஷம்…

அடுத்த வீட்டு அங்கம்மா கிழவிக்கு
இதைவிட பெரியதோர்
சந்தோஷம்…

தள்ளாத வயதிலும்
தன்னால் வெற்றிகரமாய்
வாங்கி வரப்பட்ட
ரேஷன் கடை
அரிசி, கோதும்,
மண்ணெண்ணையை நினைத்து..!

——————————–
ஈரோடு சண்முகம்