காற்றும் கர்வப்பட்டது
சாக்கடைக்கு மேலே...
பூக்கடை
-
---------------------------
-


விரல்களுக்கும்
மொழியுண்டோ...
பதிவு செய்யும் தட்டச்சு யந்திரம்

-
----------------------------
-
படிக்க வேண்டாம்
சிம்னி விளக்கை அணைத்தேன்
பிழைத்தன விட்டில்கள்
-
-----------------------------

-
பியூஸான ட்யூப் லைட்டும்
பயன்பட்டதே...
வீதியில் சர்க்கஸ்காரன்

-
-----------------------------
-
ஜன்னலோரம் சிறு தளிர்
அக்காவுக்குப் பிரசவம்
பெண் குழந்தை
-
--------------------------------

மு.முருகேஷ்
(கொஞ்சம் ஹைக்கூ கொஞ்சம் புதுக்கவிதை)