-
-வயிற்றின் உருமல்
முள்ளுக்காட்டில் ஒதுங்க
பன்றி உருமல்!
–
———————
–
வந்த ரயிலை அனுப்பிவிட்டு
வரும் ரயிலுக்காக
தண்டவாளம்
–
——————–
–
பனியில் நனைந்த நிலவு
பூத்துக் குலுங்கும் மரம்
சாத்துகிறாள் ஜன்னல்
–
———————-
–
பௌர்ணமிப் பெரு வெளிச்சம்
ஒளியத் தவிக்கும்
எறும்பு
–
———————
–
கண்ணாடி வாழையிலை
அமர வந்த பனித்துளி
நழுவிக் கீழிறங்கும்!
–
————————
–
நல்ல காலம் பொறக்குது
குடுகுடுப்பை வர
கலைந்தது சேவல் உறக்கம்!
–
————————- டி.என்.இமாஜான்
நல்ல காலம் பொறக்குது…!
Aucun commentaire:
Enregistrer un commentaire