-
சுற்றிப் பார்க்க வந்த ஊர்
பஸ் பிரேக் டவுன்
அலுப்புடன் பயணிகள்
–
———————
–
பாலாபிஷேகம் முடிந்தும்
வெள்ளையாகவில்லை
விக்கிரகம்!
–
——————–
–
அலைகள் சுருங்கும்
விழுந்தது கல் அல்ல
உதை பந்து
–
——————–
–
கோழிக் குஞ்சைத்
துக்கிப் போகும் ராஜாளி
மேகம் பார்க்கும் கடல்
–
———————
–
நிலா வெளிச்சம்
தாழம் புதர்
ஜோடிப்பாம்புகள் நடனம்
–
———————-
–
சாத்திக் கிடக்கும் வீடு
தாழ்வாரம் தாண்டும் மழை
பிரிக்கப்படாத கடிதம்
–
————————டி.என்.இமாஜான்
ஜோடிப்பாம்புகள் நடனம்..!
Aucun commentaire:
Enregistrer un commentaire