-
-
==
கடற்கரை மணல் ஓவியம்
நண்டு பார்த்து ரசித்தது
அவளின் பாதச் சுவடுகள்!
–
————————
–
குதிரைகள் சுற்றி வந்தன
ஒன்றை ஒன்று முந்தவில்லை
குடை ராட்டினம்
–
————————–
–
ஊருக்குள் வெள்ளம்
ஊர் சுற்றக் கிளம்பியது
ஆத்து மீன்கள்
–
————————
–
மழையில் நனைகிறதென்று
கவலைப்பட்டது வண்டு
செடியில் பூக்கள்
–
—————————-
–
சுருட்டை முடிக்காரி
சுருட்டி விட்டாள்
தொலைந்தது மனசு
–
———————-
–
தண்ணீரில் கண்டமென்று
எந்த ஜோசியரும் சொல்லவில்லையே
வெள்ளத்தில் மிதந்தது செடி!
–
———————————-
-டி.என்.இமாஜான்
நகைச்சுவையான ஹைகூ கவிதைகள்–
மழையில் நனைகிறதென்று கவலைப்பட்டது வண்ட
Aucun commentaire:
Enregistrer un commentaire