-

இருட்டில் நடக்க
சரியான துணைதான்
ஒற்றை நிலா
-
------------------
-


தலைவர் சிலைக்கு
நிழற்குடை வேண்டும்
வெயிலில் ஊர்வலம்

-
--------------------
-
எங்கும் நிறைந்திருக்கிறது
கடவுளல்ல...
பசி
-
--------------------

-
மரங்களை வெட்டாதீர்கள்
விளையாட எங்கே போகும்
வீசும் காற்று

-
----------------------
-
வரவேற்காத வாசலில்
இன்னும் கேட்கிறது
ஒப்பாரி சத்தம்
-

----------------------------
மு.முருகேஷ்
கொஞ்சம் ஹைகூ கொஞ்சம் புதுக்கவிதை