lundi 27 octobre 2014

காதலிக்காக!!

மண்ணோடு மழைத்துளிகள்

முத்தமிடும் வேளையில்

நெஞ்சோடு பதிந்த உன் நினைவுகள்

என்னோடு உறவாட

நான் அதை எண்ணி கவி பாட !!

உன் விழி ஓரம்

சிறு துளி ஈரம்

நான் காணும் நேரம்

நொடிக்கு நொடி

என் இதயம் ஏனோ வெடிக்குதடி

உன் இதழ்கள் விரியக் கண்டால்

மீண்டும் தானாய்த் துடிக்குதடி!!

நீ பேசிடும் மௌனம்

மொழிகளில் புதுமை

உன் மௌனங்கள் கூட

எந்தன் செவிகளில் இனிமை!!

எனைப் போல் காதல்

நீ கொள்ளும்போது

தரைமேல் மீனாய்

உந்தன் கால் துள்ளும்போது

தேடி வந்து எனை

நீ சேரு!!

சேராவிட்டால் எடுப்பேன்

பிறவிகள் நூறு!!!


---


நிரஞ்சன்






காதலிக்காக!!

Aucun commentaire:

Enregistrer un commentaire