அறிவும் தேவை இல்லை
பார்க்க தேவை இல்லை
பேசத் தேவை இல்லை
வாய்மை போதும் நம்பிக்கை போதும்
அன்பு போதும்; சுகமோ துக்கமோ
தோள் கொடுக்கும் தோழமை போதும்
ஆபத்தில் நீட்டும் கரம் போதும்
பேதமும் கொள்வதில்லை
வேறுபாடும் காட்டுவதில்லை
உண்மை நட்பு
கணிப்பதும் இல்லை
மதிக்கவும் செய்யும் மன்னிக்கவும் செய்யும்
அங்கீகாரத்தை மட்டுமே எதிர்ப்பார்க்கும்
உயிர் உள்ள வரை உயிர் வாழுமே
மெய்யான நட்பு
மெய்யான நட்பு
Aucun commentaire:
Enregistrer un commentaire