நான் திகைத்து ஒதுங்கினேன் மெல்ல.
கால் தொட்டுச் சென்ற அந்நீரும்
தடம் பதித்து, பின் மீண்டது போலும்!
குளிர் தாண்டி நெஞ்சில் ஒரு சூடும்
பரவி வர, அதில் மயங்கி நானும்,
அந்நிலையில் உணர்ந்ததொரு மோனம்,
"அதிலேயே இருப்போமா நாளும்?"
எனும் ஆசை நீராவி போலே,
அடங்கி விட அவள் பெயரை நானும்
உச்சரிப்பதை நிறுத்திக் கொண்டேன்.
தனியாகவே திரும்பிச் சென்றேன்!
சூடடங்க, அமைதியுறும் நீரும்.
நாள் கழிய, மறப்பேனோ நானும்?
காலத்தின் கொடுங்கருணை யாவும்
பாவம்! எனைப் போன்றோர் மேல் பாயும்.
கருணை!
Aucun commentaire:
Enregistrer un commentaire