என்பதால் பெயரைக் கேட்டாலே அதிர வைப்பதாக
இருக்கிறது அல்சீமர்.
-
இந்தக் கொடிய நோய்க்குத் தீர்வு காணும் முயற்சியில்
முதல் கட்ட வெற்றி பெற்றிருக்கிறது அமெரிக்காவின்
டியூக் பல்கலைக்கழகம்.நோய்த்தொற்று ஏற்பட்டால்
மூளையிலுள்ள மைக்ரால்ஜியா செல்களில் அதன்
பாதிப்பு உடனடியாகத் தெரியும்.
-
இந்தப் பகுதியை ஆராய்ந்தபோது அல்சீமரால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு அஜினைன் என்ற அமினோ
அமிலம் அதிகம் சுரப்பது தெரிய வந்தது.
அல்சீமர் உண்டாக்கப்பட்ட ஓர் எலிக்கு
Difluoromethylornithine (DFMO) என்ற
வேதிப்பொருளை அளித்த போது எலியின் அஜினைன்
சுரப்பு கட்டுக்குள் வந்தது. நினைவுத்திறன்
பரிசோதனையில் எலியிடம் நல்ல முன்னேற்றம் தெரிந்தது.
-
‘இதே போல மனிதர்களுக்கும் DFMO பயன்படுத்தி
அல்சீமரை குணப்படுத்திவிட முடியும் என்ற நம்பிக்கை
வந்திருக்கிறது’ என்று உற்சாகத்தோடு சொல்கிறார்கள்
நரம்பியல் துறை பேராசிரியர் கரோல் கால்டன் மற்றும்
ஆராய்ச்சிக் குழுவினர்!
–
———————————–
அல்சீமருக்கு வருகிறது அருமருந்து!
Aucun commentaire:
Enregistrer un commentaire