--
சின்னத்தூரலில்
நனைந்த புல்வெளி,
மழையில் சற்று முன்
குளித்த ரோஜா இதழ்கள்,
மேககூட்டத்தில்
ஒளிந்து கொண்டு பார்க்கும் சூரியன்,
–
எப்படியும் காசை வீசி செல்வாய்
என்ற நம்பிக்கையில்
பிச்சை எடுக்கும் கிழவி,
இப்போதாவது பேசுவாய்
என்ற நம்பிக்கையில்
“முழுவதும் நனைந்த” நான்,
எல்லோரும் காத்திருக்கிறோம்..
–
குடை பிடித்து.
நீர் கோலத்தில்.
நடை பயின்று
வளைந்து நெளிந்து
துள்ளி குதித்து வரும்
உனக்காக..
–
————————
by Swamitnj
அவள் வருகை…
Aucun commentaire:
Enregistrer un commentaire