dimanche 28 septembre 2014

deva lokaththil navarathri

தேவலோகத்தில் நவராத்திரி விழா.




கொலு பொம்மைகளுக்கு பதிலாக தேவர்கள், தேவ பத்னிகள் , ரிஷிகள், முனிவர்கள், தத்தம் அருந்ததிகள், அனசூயைகள், அகலிகைகள், லோபாமுத்ரைகளோடு படிப்படியாக அமர்ந்திருக்கிறார்கள்.

''இந்திரா, இந்த வருஷம் என்ன விசேஷம் நமது நவராத்திரி வைபவத்தில்? ''


பிரமன் கேட்கிறான்.


'' ஒவ்வொரு வருஷமும் ஏதாவது புதிதாக ஒரு நிகழ்ச்சி உண்டே இந்த வருஷம் ??'' நாரதர் கேள்வி எழுப்புகிறார்.


''ஏன் உங்களுக்கு நான் நமது தேவலோகத்தின் மிகச்சிறந்த கலைஞர்களின் அற்புத நிகழ்ச்சிகளை அளிக்கி


றேனே போதவில்லையா? '' இது இந்திராணி.


'' ரம்பையின் பரத நாட்யமோ, மேனகையின் குச்சிப்புடியோ, ஊர்வசியின் குறத்தி டான்ஸோ எத்தனை யுகங்களாக பார்த்து பார்த்து அலுத்து விட்டதே'' . என்றான் வருணன்.


'' வருணா. போதும் நிறுத்து. பூமியில் தண்ணீர் தேவை மழையை அனுப்பு என்றால் இங்கு கண்ணீர் விடுகிறாய். எங்கள் நிகழ்ச்சிகள் பிடிக்கவில்லையென்றால் போய் வழக்கம் போல் குமுதம் படி'' என்றான் வாயு.


'' காற்றுவாக்கிலே என்று கல்கி எழுதறதை, நீ காற்றுக்கு தேவன் என்பதால் முன்பெல்லாம் படிப்பதால் என்னை குமுதம் படி என்கிறாயா'' என்று பதில் சொன்னான் வாயு.


''நவராத்ரி என்பதே ஒன்பதுநாளும் விரதம் இருக்கத்தான் என்று காந்தி தாத்தா அதோ பட்டினியாக மரத்தடியிலே உட்கார்ந்திருக்கிறார். அங்கே போயாவது கொஞ்சம் அவர் பக்கத்துலே உட்காரப்போறேன்'' என்றான் அக்னி.


''சரி இந்த பேச்செல்லாம் வேண்டாம். ஒவ்வொரு வருஷமும் பல தேச கலைஞர்கள் நிகழ்ச்சி உண்டே இந்த வருஷமும் பூமியிலிருந்து வந்து இங்கு நம்மோடு இருக்கும் M .K .T. படங்களை பார்க்கலாமோ?'' என்றார் நாரதர்.


''முழு ராத்ரி கண் முழிக்கவேண்டும். நம்மால் முடியாது'' என்றாள் அனசுயா. அதற்கு பேசாமல் ராஜ் கபூர் படங்களையாவது பார்த்தால் விறுவிறுப்பாக இருக்காது.?''


''இந்திபாட்டுலே உனக்கு விருப்பத்தை இப்படி தெரியப்படுத்திரியா ? நீ கேட்டு தான் போன வருஷம் A .M .ராஜா வையும் கண்டசாலாவையும் சேர்ந்து பாட வைத்தோம். எத்தனை தேவர்கள் அதைக்கேட்டு மகிழ்ந்தார்கள். இந்தவருஷமும் ......?


''நிறுத்து நாரதா. நீ குறும்பும் குசும்பும் பிடித்தவன். கண்டசாலா பாடுவார் என்றால் சோகப் பாட்டுக்கள் பாடுவதில் தானே அவர் பிரபலம். நவராத்ரியில் சோகம் ரொம்ப அவசியமோ? எந்த தேவன் அதை ரசிப்பான்? என்றான் நந்தி தேவன்.


உன் பெரில்லும் தேவன் இருப்பதாலும் நீ விரும்பி படிப்பது அந்த தமிழ் எழுத்தாளர் தேவன் என்பதாலும் நீ ஜாடையாக சொல்வது அந்த தமிழ் எழுத்தாளரைப்பற்றி, அதாவது அவர் எழுதிய துப்பறியும் சாம்புவை மீண்டும் நாடகமாக பார்க்கத்தான் என்று புரிந்து கொண்டேன். '' எத்தனை தரம் பார்த்திருக்கிறோம். நமக்கு இங்கு நேரம் அதிகம். அதனால் உலகத்தின் பல கலைகளை நாம் அறிவோம். புதிதாக எதாவது யோசித்து ஏற்பாடு செய்யுங்கள் இன்னும் சற்று நேரத்தில் வருகிறேன். அதற்குள் தயாராகட்டும்.'' என்று கட்டளையிட்டுவிட்டு இந்திரன் புறப்பட்டான்.


''வருணா, நாம் நிறைய தமிழ் நாட்டு சங்கீதம், வட இந்திய டான்ஸ் , பாட்டு எல்லாம் அனுபவிச்சாச்சே. கேட்டு விட்டோம். புதிது ஏதாவது என்கிறாரே தலைவர். பியானோ சங்கீதம் போடலாமா? ''என்றான் வாயு.


''பியானோ ஓகே. ஆனால் நமக்கு என்னவோ அந்த மேல் நாட்டு சங்கீதம் ரசிக்க முடியவில்லையே ''என்று அபிப்ராயம் தந்தார் நாரதர்.


'' அப்படியென்றால் பியானோ வேண்டாம். வேறே.....? யமா. நல்ல வேளை நீ இங்கே வந்தாய் . இந்திரன் புதிதாக இந்த வருஷம் ஒரு கலை நிகழ்ச்சி வேண்டும் என்கிறார். கர்னாடக சங்கீதம் கேட்டாகி விட்டது. மேலைநாட்டு வாத்யங்களும் பிடிக்கவில்லை. என்ன புதிதாக ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு பண்ணுவது?''


''கொஞ்சம் யோசிக்க விடுங்கள். அஹா!, நீங்கள் சொன்னதிலிருந்தே ஒரு அருமையான யோசனை. மேலைநாட்டு வாத்தியம் ஆனால் கர்நாடக சங்கீதம் அதில். இந்த ஐடியா எப்படி ? என்றான் யமன்.


''அசாத்யம் யமா? எங்களில் நீ சுறு சுறுப்பானவன். சீக்கிரமே செயலாற்றுபவன். ஆனால் நீ என்ன மனதில் நினைக்கிறாய் என்று புரியவல்லையே.''


நீங்கள் என்ன சொன்னீர்கள். இதுவரை இல்லாத ஒரு நிகழ்ச்சி. மேற்கத்திய முரட்டு வாத்தியம் சுகமாக அதில் பாரத நாட்டு பண்பாட்டு சங்கீதம் அதில்....எப்படி?


''யமா உன் சாமர்த்தியமே சாமர்த்தியம். இதை எப்படி செய்வாய் சீக்கிரம்.? ''.


யமன் அவசரமாக பூமிக்கு சென்றான். யோசித்துக்கொண்டே சென்ற அவன் அவன் கண்ணில் ஏனோ மாண்டலின் ஸ்ரீநிவாஸ் பட்டுவிட்டார். அகாலமாக அவரை அவசரமாக தேவலோகத்திற்கு அழைத்து சென்றுவிட்டான் யமன்.


அங்கே இந்த நவரத்த்ரி வைபவம் வெகு சிறப்பாக தேவலோகம் பொங்கி வழியும். தேவாதி தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் முனிவர்களுக்கும் தெய்வங்களுக்கும் இடையில் சங்கீத தேவதையாக மாண்டலின் நிகழ்ச்சி அவர்கள் எல்லோர் மனம் குளிர நடக்கும். ஆனால் நமக்கு ஒரு பெரும் இழப்பை இந்த யமன் சுயநலத்துக்காக எற்படுத்திவிட்டானே. என்ன செய்ய? மீண்டும் ஸ்ரீனிவாசை தாருங்கள் தேவர்களே.

Jayasala 42






deva lokaththil navarathri

Aucun commentaire:

Enregistrer un commentaire