mercredi 3 septembre 2014

என் கனவுக் காதல்!!

பூவுக்கும் உன் வாசம் வாங்கிட ஆசையடி

நீயோ இளையராஜா தந்த ஓசையடி

கைவிரல் மோதிரமாய்

உனைக் காத்திடுவேன் பத்திரமாய்

கண்களுக்குள் வந்து நின்றாய்

கார்மேகம் தந்து சென்றாய்

வார்த்தையொன்று பேசவில்லை

நீ பேசிடவும் ஆசையில்லை

காகிதமாய் தெரியுதடி உன் கண்கள்

கருவிழிகள் அழகிய ஓவியமா

இல்லை

மொழிகள் சொல்ல மறந்த காவியமா !!


கண் முன்னே உன் உணவோ காத்திருக்கும்

கண்ணுள்ளே என் நினைவோ பூத்திருக்கும்

நீயோ வெகு தூரம்

நானோ ஒரு ஓரம்

இதழ் ஓரம் சிரிப்போடு

தினந்தோறும்

உன் விழிகள் எனைத் தேடும்

பல நேரம்

என் மொழியோ அதைப் பாடும் !!


கனவென்று சொல்லி

கற்பனையில் தள்ளி

மறைந்துவிட்டால் அந்தக் கள்ளி

தூக்கம் களைந்து மறுநாள் எழுந்துவிட்டேன் துள்ளி

இது சொல்ல மறந்தக் காதலுமல்ல

சொல்லித் திரிந்த கவிதையுமல்ல

நினைத்திடும் போது

சிரித்திட வேண்டி

விதைத்த விதை,

முளைத்தக் கதை..


----------

நிரஞ்சன்






என் கனவுக் காதல்!!

Aucun commentaire:

Enregistrer un commentaire