பெஷாவர் கண்ட பெருந்துயரம்!!
******************************
பெஷாவர் கண்ட பெருந்துயரம்!!
******************************
விடியும் பொழுது
துள்ளி எழுந்து
நாள் முடியும் பொழுது
மண்ணில் விழுந்து
என்றும்
தீராத தாகமாய்
இன்றும்
மாறாத சோகமாய்
நின்றிடும் மழலைகளே!!
அந்நிய நாட்டில் பிறந்தாலும்
இந்தியராக இருந்தாலும்
மழலைகள் என்றும்
மணம் மாறா மலர்களே!!
கயவர்களே !!
வீரம் காட்டிட வழிகள் தேடி
நீங்கள் கொன்ற பிஞ்சுகள் எல்லாம்
நஞ்சுகள் அறியா உள்ளங்களே !!
காலங்கள் விரைந்து மாறிவிடும்
பதில்கள் யாவும் கூறிவிடும்
மழலைகள் வெடித்தன
எங்கள் மனங்களும் துடித்தன
இறைவன் ஒருவன் இருந்துவிட்டால்
அவனும் நடந்த துயர் மறந்துவிட்டால்
எனைப்போல் ஒருவன்
காலனாய் உங்கள் கண்முன் வருவான்
மழலைகள் கண்ட வலியை
மரணத்தால் தருவான்!!
---------------
நிரஞ்சன்
You Might Find These Useful:
பெஷாவர் கண்ட பெருந்துயரம்!!
Aucun commentaire:
Enregistrer un commentaire