தமிழில் இது எனது முதல் தொடர்கதை முயற்சி. பிழைகள் இருக்கும். முடிந்தால் மன்னிக்கவும். நேர்மறை மற்றும் எதிர்மறையான விமர்சனங்களை வரவேற்கிறேன். அனைவரும் இக்கதையினைத் தொடர்ந்து படிக்க வேண்டுமென்பதே எனது ஆசை. கதைக்குள் செல்வோமா?
சத்தமின்றி என்னை நெஞ்சோடு சேர்த்து!! -1
அதிகாலை இருட்டு குளிர்காற்றோடு சேர்ந்து குலவிக் கொண்டிருந்தது. ஒரு பாதி தேங்காய் மூடி போன்று இருந்த நிலா மகள் நட்சத்திரத் தோழிகளுடன் கடைசி முறையாக கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தாள்...
ம்ம்மா..... ம்ம்மா.....
வீட்டுக்குள் தனது அறையில் படுத்திருந்த அருண் கண்விழித்தான்.. படுக்கையில் எழுந்து அமர்ந்து கைகள் இரண்டையும் மேலே உயர்த்தி முதுகை லேசாக பின்னால் வளைத்து சோம்பல் முறித்தான்..
அருண்... 28 வயது இளம் வாலிபன். இறுகிய திண்ணென்ற புயங்களும், விரிந்த மார்பும் அவன் கடின வேலைகளுக்கோ அல்லது உடற்பயிற்சிக்கோ பழக்கப் பட்டவன் என்பதை உணர்த்தின.. ஆழ்ந்த உணர்ச்சி மிகு கண்கள் அவனுக்கு ஒரு முரட்டுத் தனமான அழகைக் கொடுத்தன. மீசையை மழித்து விடுவதே பேஷன் ஆகிப் போன இந்த காலத்தில் அவனது அடர்த்தியான மீசை லேசாக முறுக்கி விடப்பட்டு வளர்க்கப்பட்டிருந்தது... அதிக சுருளாகவோ அல்லது ஒரேயடியாக நேராகவோ இல்லாத அவனது அடர்த்தியான கேசம் அவனுக்கு மிக லட்சணமாக இருந்தது..
முகத்தை கழுவி ப்ருஷ் பண்ணிவிட்டு கிட்செனுக்குள் நுழைந்தான்... stove பற்ற வைத்து காப்பி போட்டான்... இளம்சூடாகவே அதைப் பருகி விட்டு அந்த சிறிய ஓட்டு வீட்டின் ஹாலுக்கு வந்து சுவரில் இருந்த கடிகாரத்தில் மணி பார்த்த பொது அது 3.30 எனக் காட்டியது...
என்ன நந்தினி? பசிக்குதா?.... குட்டி போட்டு இரண்டு நாட்களே ஆகியிருந்த நந்தினியின் தலையை தடவிய படியே கேட்டான்....
தாய்மை கண்களில் தெறித்து வழிய நந்தினி தலையை மெல்ல ஆட்டியது... அதன் கழுத்தில் கட்டியிருந்த மணி மெல்ல சலசலத்தது...
அது ஒரு பெரிய பண்ணை... ஒரு ஆறு ஏக்கர் இருக்கும்... அதன் நடுவில் போட்டு வைத்தது போல அந்த சிறிய பண்ணை வீடு... 150 பசுக்களும், கால்களும், ஒரு ஆயிரம் ஆடுகளுடன் ஆட்டுப் பண்ணை, பண்ணையின் ஓரமாக ஒரு சிறிய குளம் அதில் மீன்களும் வாத்துகளும், இவை போதாதென்று கோழிப்பண்ணை வேறு... இவை எல்லாம் அருணால் பார்த்து பார்த்து உருவாக்கப்பட்டவை.... தனியாக வயல், காய்கறித் தோட்டம், என அவனிடம் இல்லாதது எதுவும் இல்லை... விவசாயத்தின் மீது அவனுக்கு அப்படி ஒரு காதல்.
spreyaril தண்ணீரைப் பீச்சியடித்து தொழுவத்தை கழுவிக்கொண்டிருக்கும்போது ராமன் வந்தார். அவர்தான் அவனது உதவியாளர். அவனுடைய அப்பா காலத்திலேயே அவர்களிடம் தான் இருக்கிறார். கிராமத்தில் தான் வீடு.
ராமண்ணா..... டைகர்கு வாக்சின் போடணும்... டாக்டரை வர solli இருக்கேன்.... koncham paathukunga ....
Sarippaa.... yen nee inga irukka maattiya?
Illa... naan oru vishyama townku poren... entrapadi than velaiyil moozhginaan...
அப்பா காலத்தில் enkum போது இப்போ அவர் எங்கே என்னும் கேள்வி உங்களில் சிலருக்கேனும் வரலாம். நீங்கள் நினைத்தது சரி தான். இப்போது அவர் உயிரோடு இல்லை. அவர் மட்டுமல்ல அவனது அம்மாவும் இல்லை. அருணுக்கு இப்போதைய சொந்தம் அவனுடைய ஒரே தம்பி மட்டுமே. அஜய், 18 வயது ஆகிறது. அவன் பிறந்த 6 மாதத்தில் பெற்றோர் ஒரு விபத்தில் சேர்ந்து விட அருண் தான் அஜயின் அம்மா அப்பா அண்ணன் எல்லாமும். அண்ணன் என்றால் அப்படி ஒரு பக்தி அஜய்க்கு.....
அதற்காக தம்பிக்காக தன்னுடைய எல்லாவற்றையும் துறந்தான் அருண் என நீங்கள் எண்ண வேண்டாம். அந்த இளமையில் தம்பிக்கு வேண்டிய எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டே தனக்கு தேவையானவற்றையும் பெற அவன் தயங்கவில்லை. அஜயின் குழந்தைப் பருவம் முழுதும் ராமனின் மனைவி தான் அவனுக்கு தாய், செவிலி, எல்லாமே... இப்போதும் அருணுக்கும், அஜய்க்கும் கண்ணம்மா அம்மா தான்.. அவர்கள் மகன், விமல் தான் இவர்கள் நண்பன், சஹோதரன்....
ராமன் மற்றும் குடும்பத்தின் உதவியோடு அருண் தனது இன்ஜினியரிங் படிப்பை எலக்ட்ரிகல் அண்ட் எலேக்ற்றோனிக்சிலும் முடித்து தன பெரும் கனவான MBA படிப்பையும் தடை படாமல் முடித்தான். அதற்குப்பிறகு தன்னுடைய இஷ்டமான விவசாயத்தை ஏற்றேடுத்தான். படிப்பும் வேலை செய்யும் துறையும் சம்மந்தமே இல்லாமல் இருக்கிறதே என்பவர்களுக்கு 'இரண்டுமே எனது ஆசைகள்... அதிலென்ன தப்பு' என்று சிரித்துக்கொண்டே கூறுவான். அஜயும் இப்போது தனது விருப்பத் துறையான மெகானிகல் இன்ஜினியரிங் ஒரு பிரபல கல்லூரியில் சேர்ந்திருக்கிறான். மாவட்ட அளவில் முதலிடம் +2 வில் வாங்கிய அவன் மெகானிகல் சேர வேண்டும் என்று விரும்பிய போது அருண் அவனைத் தடுக்கவில்லை.
அரைக்கை பனியன் வியர்வையில் அவன் தேகத்தோடு ஒட்டி இருந்தது. தனது அன்றாட வேலைகளை முடித்து வீட்டுக்குள் நுழைந்து குளித்து முடித்து அடுக்களைக்குள் வந்தபோது கண்ணம்மா சுடச்சுட தோசையும் சட்னியும் தயாராக்கி இருந்தால்.
அம்மா.... விமல் என்னிக்கு வரான்?.... தோசையை எடுத்து தட்டில் போட்டு சட்னியையும் ஊற்றி வாயில் போட்டுக்கொண்டே கேட்டான்...
தெரியலைப்பா....
ரெண்டு நாளா நான் கூப்பிட்டுகிட்டே இருக்கேன்.... லைன்ல கெடைக்க மாட்டேங்குறான்...
கூப்பிட்டா சொல்லுங்கம்மா என்னை உடனே கூப்பிட...
காலை 11 மணிக்கெல்லாம் ரெடியாகி வந்த அருண் தன்னுடைய போலேரோவில் கிளம்பினான்...
Thodarum ...
சத்தமின்றி என்னை நெஞ்சோடு சேர்த்து!!
Aucun commentaire:
Enregistrer un commentaire