mercredi 27 mai 2015

வித்தியாசமான வீடு

ஒவ்வொரு முறையும் அந்த இருப்பிடத்தை
கடந்து செல்லும் போதும்
இதய துடிப்பு சற்றே அதிகரிக்கும்

எவ்வாறு இருக்கிறார்கள் இந்த இருப்பிடத்தில்
கதவில்லை, வாசல்லிலை, சுவரில்லை
ஏன் கூரையும் இல்லை

இருப்பினும் தெரிந்தவர்களும் தெரியாதவர்களும்
ஒரே இடத்தில்! இங்கும்
நட்பின் கரங்கள் நீளுமோ?

வெளிஉலகம் விழித்திருக்கையில்
அடங்கி இருப்போரும்
உறங்குகையில் ஆட்டம் போடுவோரும்

அவர்கள் உறங்கும்போது மட்டும்
அவர்களை சந்திக்க வரும்
நட்பும் உறவும்

அவர்களுக்காக கொண்டுவரப்படும்
மலர் வளையங்களும்
அலங்காரங்களும்

வெளிஉலகில் நிந்திக்கபட்டிருந்தாலும்
கல்லறையிலாவது நிம்மதியுடன்
இருப்பார்களா ?



வித்தியாசமான வீடு

Aucun commentaire:

Enregistrer un commentaire