jeudi 28 mai 2015

கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா?


-
கங்கையில் குளித்தால் புண்ணியமா?
-சிவபெருமானை நோக்கிப் பார்வதி கேட்டாள்:
-
‘சுவாமி, கங்கையில் குளிப்பவர்களுக்கெல்லாம்
பாவம் போய்விடும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

அதனால் எல்லோரும் பாவம் செய்துவிட்டு அதைப்
போக்கிக்கொள்ள கங்கையில் வந்து முழுகுகிறார்கள்.
அது நியாயமா?’
-

‘அதில் முழுகுபவர்கள் எல்லோருக்கும் பாவம்
போகாது. லட்சம் பேரில் ஒருவர்தான் அப்பேற்றைப்
பெறுவர்’ என்றார் சிவன்.
-

‘எப்படி?’ என்று பார்வதி கேட்டவுடன் அவரை
அழைத்துக்கொண்டு கங்கைக்குச் சென்றார். ‘இங்கு
நான் இறந்தவன்போல் படுத்துக் கொள்கிறேன்.
நீ மனித உருவில் கங்கையில் குளித்துக் கரையேறும்
ஒவ்வொருவரையும் நோக்கி, பாவம் கழித்தவர்கள்
யாரேனும் இவர் வாயில் ஒரு துளி கங்கைத் தண்ணீர்
விட்டால் இவர் பிழைத்துக்கொள்வார் என்று நீ கூறு,
பின் நடப்பதைப் பார்’ என்றார்.
-

பார்வதியும் சாதாரண பெண் வடிம் தாங்கி அங்கு
வந்து குளித்த ஒவ்வொருவரிடமும் கெஞ்சினாள்.
ஓவ்வொருவரும் அவளிடம், ‘எனது பாவம் முழுவதும்
போய்விட்டது என்று எப்படி நிச்சயமாகச் சொல்லமுடியும்?’
என்று சொல்லிவிட்டு போய்விட்டார்கள்.
-

ஒரே ஒருவன் மட்டும் பார்வதி கூறியதைக் கேட்டு
‘இதோ ஒரு நிமிடம்’ என்று கூறி கங்கையில் மூழ்கிக்
குளித்துவிட்டு கங்கைத்; தண்ணீரைக் கொண்டுவந்து,
சவம்போல் படுத்திருக்கும் சிவபெருமான் வாயில்
ஊற்றினான். அவர் உயிர் பெற்றவர்போல எழுந்தார்.
-

பார்வதிக்கு புரிந்துவிட்டத. ‘அத்தனைபேர் கங்கையில்
முழுகினாலும் அதில் மூழ்கியதால் பாவம் போய்விட்டது
என்று நிச்சயமாக நம்பியவன் ஒரே ஒருவன்தான்.
அவனுக்குத் தான் நிச்சயமாகப் பாவம் போகும்’ என்று
சிவன் கூறியதும் பார்வதி தலை கவிழ்ந்தாள்

—————————————.



கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா?

Aucun commentaire:

Enregistrer un commentaire